முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / அன்னவாசல் அருகே பாம்பை விரட்டும்போது வெடி பொருட்கள் வெடித்தது... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம்

அன்னவாசல் அருகே பாம்பை விரட்டும்போது வெடி பொருட்கள் வெடித்தது... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம்

வெடிவெடித்ததில் எரிந்துபோன வீடு

வெடிவெடித்ததில் எரிந்துபோன வீடு

Pudukkottai | புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பை அடிக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள நாங்கபட்டி, சித்தகுடிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் வீட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்துள்ளது.  பாம்பை அடிக்க முயன்ற போது அது வீட்டில் இருந்த மின் இணைப்பு பெட்டிக்குள் புகுந்து விட்டதாக கூறப்படுகிறது . அப்போது நல்ல பாம்பை அடித்தபோது எதிர்பாராத விதமாக மின் இணைப்பு பெட்டியில் இருந்து தீப்பிடித்து மின்சார வயர்கள் எரிய தொடங்கியது.

இதையடுத்து வீட்டில் இருந்த பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களும் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் சுப்பிரமணியன் (62), அவரது மகன் மகேஸ்வரன் (23), கலியபெருமாள் மகன் ராமகிருஷ்ணன் (40) பவுன்துரை மனைவி விஜயராணி (28)  பவுன்ராஜ் மகன் மோகன்ராஜ் (5) ஆகிய 5-பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மகேஸ்வரன் உடல் நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also see... முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

இச்சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து சுப்பிரமணியன் வீட்டில் எவ்வாறு நாட்டு வெடிகள் வந்தது என்பது குறித்தும் விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை

First published:

Tags: Crime News, Firecrackers, Injured, Pudukkottai, Snake