ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

காருக்குள் புகுந்த 5 அடி நீள பாம்பு..! அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு..!

காருக்குள் புகுந்த 5 அடி நீள பாம்பு..! அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

காரின் அடியில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai | Pudukkottai | Tamil Nadu

  புதுக்கோட்டை அருகே அரசு மருத்துவரின் காருக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள பாம்பை தீயணைப்புத்துறையினர் அரை மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலராக நவீன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் தனது காரை கந்தர்வகோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளார்.

  இந்த நிலையில் மருத்துவமனையில் பணியை முடித்த பின்னர் தனது காரை இயக்கிய போது, 5 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு காரின் அடியில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  உடனடியாக கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

  இதையும் படிங்க | புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு இதுதான் காரணமா?

  இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நவீன கருவிகளைக் கொண்டு அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி கொம்பேறி மூக்கன் பாம்பை காரில் இருந்து உயிருடன் லாவகமாக பிடித்தனர். இதன் பின்னர் வனத்துறையினர் மூலம் பிடித்த பாம்பை காப்பு காட்டில் விடுவித்தனர்.

  செய்தியாளர்: ரியாஸ், புதுக்கோட்டை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Pudukkottai, Snake