புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் பாண்டிமுருகன். இவரது மகன் பரணி (21). இவரது மோட்டார் சைக்கிளை விற்பனை செய்வதாக இவர் சமூக வளைதலங்களில் பதிவு ஒன்றை போட்டதாக கூறப்படுகிறது.
இந்த விளம்பரத்தை பார்த்த காரைக்குடி போலீஸ் காலணி பகுதியை சேர்ந்த நந்தா மகன் ரஞ்சித் (19) காரைக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வினோத்குமார் (18) ஆகிய இருவரும் காரைக்குடியில் இருந்து இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே இருந்து கொண்டு பரணிக்கு போன் செய்துள்ளனர்.
அதில், தாங்கள் மோட்டார் சைக்கிள் விற்பதாக விளம்பரம் பார்த்தோம். அதை வாங்குவதற்கு வந்துள்ளோம். எடுத்து வாருங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விற்பனை செய்வதற்காக பரணி தனது மோட்டார் சைக்கிளை இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே எடுத்து வந்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளை பார்த்த ரஞ்சித், வினோத்குமார் இருவரும் மோட்டார் சைக்கிளை ஓட்டிபார்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனை நம்பிய பரணி மோட்டார் சைக்கிளை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளுடன் அங்கிருந்து தப்பி சென்றனர். வெகுநேரம் ஆகியும் மோட்டார் சைக்கிள் திரும்பி வராததால் சந்தேகமடைந்த பரணி சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் அவர்களை தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.
Also see... காய்ந்த பொருட்களில் அவதார் கதாபாத்திரம்
பின்னர் இதுகுறித்து பரணி இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் 24 மணி நேரத்திற்குள் மோட்டார் சைக்கிளை கடத்தி சென்ற ரஞ்சித் மற்றும் வினோத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike Theft, Crime News, Local News, Pudukkottai