புதுக்கோட்டையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டியல் சமூகத்தினர் இழிவு படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. புதுக்கோட்டை அருகே புத்தாண்டு கொண்டாடிய பட்டியல் சமூக மக்களை இழிவாக பேசியதாக மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், தொடையூர் கிராமத்தில், டிசம்பர் 31ஆம் தேதி இரவு பட்டியல் சமூக மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதே ஊரில் வசிக்கும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த கமல் மற்றும் சரத்குமார் ஆகியோர், சாதி பெயரை சொல்லி அவர்களை இழிவாக பேசியதாக தெரிகிறது. மேலும், புத்தாண்டை முன்னிட்டு வெட்டுவதற்காக வைத்திருந்த கேக்கையும் அவர்கள் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளனூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கமல் மற்றும் சரத்குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் நடந்த தீண்டாமை பிரச்னையின் ஈரம் காய்வதற்குள், அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்திலுள்ள துடையூர் கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக நியூஸ்18 தொலைக்காட்சி அங்கு சென்று கள ஆய்வு நடத்தியதில், அங்கு மாற்று சமூகத்தினரால் தொடர் இன்னல்களை சந்திப்பதாக பட்டியல் இன மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளம்பெண்கள் சாலையில் நடந்து சென்றால் கிண்டலடிப்பது, இளைஞர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவது என தெரிந்தே பல தவறுகள் நடைபெறுவதாக புகார் தெரிவித்துள்ளனர். கோயிலில் சாமி கும்பிடுவதிலும் தகராறு செய்வதாக வேதனையோடு தெரிவிக்கின்றனர். சாதி ரீதியான ஒடுக்குமுறையை ஒழித்து சமநிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dalit, Pudukkottai, Verbally harrased