முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / 17வயது சிறுமியை கடத்தி மது கொடுத்து பாலியல் வன்கொடுமை - புதுக்கோட்டையில் கொடூரம்

17வயது சிறுமியை கடத்தி மது கொடுத்து பாலியல் வன்கொடுமை - புதுக்கோட்டையில் கொடூரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Pudukkottai : புதுக்கோட்டை அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கிராம உதவியாளர், சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudupatti, India

புதுக்கோட்டையில்  17 வயது சிறுமிக்கு மது வாங்கிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று அவருக்கு தெரியாமல் மது வாங்கி கொடுத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வரும் (தலையாரி) முருகேசன்(38)  மற்றும் ஒரு 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்ததையடுத்து முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மற்றொரு குற்றவாளி 16 வயது சிறுவன் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் அந்த சிறுவனை ஆஜர்படுத்திய போலீசார் அவனை திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொண்டு சென்று அடைத்தனர்.

Must Read : இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு மனைவி பாலியல் பலாத்காரம்... நண்பருடன் தொழிலதிபர் கைது

கைது செய்யப்பட்ட முருகேசன்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் கிராம நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - ர.ரியாஸ், புதுக்கோட்டை.

First published:

Tags: POCSO case, Pudukottai, Sexual harassment