ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

கோயில் பொருள்களை திருடிய கும்பல் மீது தாக்குதல்.. 10வயது சிறுமி மரணத்துக்கு காரணம் யார்? - நடந்தது என்ன?

கோயில் பொருள்களை திருடிய கும்பல் மீது தாக்குதல்.. 10வயது சிறுமி மரணத்துக்கு காரணம் யார்? - நடந்தது என்ன?

ஆட்டோவில் வந்து கோயிலில் திருட்டு

ஆட்டோவில் வந்து கோயிலில் திருட்டு

Pudukkottai News : 10 வயது சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து கொள்ளை கும்பலை சேர்ந்த சத்திய நாராயணசாமி - லில்லி புஷ்பா தம்பதியினர் போலீசாருடன் தகராறு செய்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டையில் கோயில் பொருட்களை குடும்பத்துடன் திருடிச்சென்றபோது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளான ஆழ்வாபட்டி, கீழையூர், அரையான்பட்டி, வாரியப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்த கோயில்களின் வெளிய மாட்டப்பட்டிருந்த வெண்கல குத்துவிளக்கு, மணி உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டு ஒரு கும்பல் கடந்த 14ம் தேதி மாலை ஆட்டோவில் தப்பியதாக கூறப்படுகிறது.

  இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள்  மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஆட்டோவில் தப்பிச்சென்ற கும்பலை இருசக்கர வாகனங்களில் சென்று விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் ஆட்டோவை வேகமாக ஓட்டிச் சென்றதோடு ஆட்டோவில் இருந்த கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட வெண்கல பொருட்களையும் துரத்தி வந்த நபர்கள் மீது வீசி எறிந்தது.

  எனினும் அவர்களை பின் தொடர்ந்து வந்த ஊர் மக்களும், இளைஞர்களும் திரைப்பட பாணியில் சேசிங் செய்து புதுக்கோட்டை நகர் பகுதிக்குள் இருக்கும் மச்சுவாடி எனும் இடத்தில் அந்த ஆட்டோவை வழிமறித்து பிடித்தனர்.

  இதையும் படிங்க : ரூ.8.5 கோடி மதிப்புள்ள 1074 உயர் ரக ஐபோன்களை விற்று நூதன மோசடி... நிறுவன ஊழியர் போட்ட மாஸ்டர் பிளான்

  இதில் பொதுமக்கள் சிலர் அந்த கொள்ளை கும்பலை சேர்ந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த ஆட்டோவில் இருந்த 10 வயது சிறுமியான கற்பகாம்பிகா படுகாயம் அடைந்தாள். ஆனால் இதுகுறித்து ஊர் மக்கள் அந்த சிறுமியின் தந்தை தாக்கியதில் தான் அந்த குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தனர்.

  இதேபோல் அதிலிருந்து கணவன், மனைவி உள்ளிட்ட மற்ற 5 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  அதன்பின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோயில்களில் திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்பி வந்த கும்பல் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த சத்தியநாராயணசாமி, அவரது மனைவி லில்லி புஷ்பா, மகன்கள் விக்னேஸ்வரசாமி, சுபமெய்யசாமி மற்றும் மகள்கள் கற்பகாம்பிகா, ஆதிலட்சுமி ஆகியோர் என்பது தெரியவந்தது.

  Also Read : மது கொடுத்து 16வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. திருச்சியில் பயங்கரம்

  இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து கற்பகாம்பிகாவுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.

  இந்நிலையில், நேற்று மாலை கற்பகாம்பிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். தங்களது மகள் உயிரிழந்ததை தொடர்ந்து பெற்றோர்களான கொள்ளை கும்பலை சேர்ந்த சத்திய நாராயணசாமி - லில்லி புஷ்பா தம்பதியினர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  எனினும் போலீசார் அவர்களையும் அவரது மகன்களையும் தொடர்ந்து பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கோயில்களில் திருடிய சுமார் 200 கிலோ மதிப்பிலான வெண்கல பொருட்களை உடையாளிபட்டி போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இதேபோல் கீரனூர் பகுதியில் உள்ள கோயில்களிலும் வெண்கல பொருட்கள் திருடுபோய் உள்ளதாக அந்த காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  அதேபோல் 10 வயது சிறுமி கற்பகாம்பிகா படுகாயம் அடைந்த நிலையில் தற்போது அந்த சிறுமி உயிரிழந்திருப்பதால் இந்தசம்பவம் குறித்து புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து யார் அந்த சிறுமியை தாக்கியது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இதையும் படிங்க : அரசு வேலை வாங்கித்தர்றேன்.. ரூ.80 லட்சத்தை சுருட்டிய மோசடி இளைஞர்.. திருச்சியில் பகீர் சம்பவம்

  தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

  செய்தியாளர் : ரியாஸ் - புதுக்கோட்டை 

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Pudukkottai