ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

சமையலறைக்குள் புகுந்த 10 அடி மலை பாம்பு... ஒரு மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

சமையலறைக்குள் புகுந்த 10 அடி மலை பாம்பு... ஒரு மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

வீட்டிற்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பு

வீட்டிற்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பு

10 அடி நீளமுள்ள பாம்பில் தலையை பிடித்து கூரை வழியாக வெளியே எடுக்க முயன்றனர். வால் பகுதி வீட்டுக்குள் சுற்றிக்கொண்டதால் பாம்பை வெளியே எடுக்க அதிக நேரம் எடுத்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வீட்டிற்குள் நுழைந்த 10 அடி நீள மலைப்பாம்பாம்பு,  வனத்துறையினரால் ஒரு மணி நேரம் போராடி மீட்கப்பட்டது.

  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம். அவரது வீட்டின் சமையலறைக்குள் 10 அடி நீள மலைப்பாம்பு நுழைந்துள்ளது. இதனை கண்ட சிவலிங்கம் அலறியடித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், அவரது வீட்டின் கூரை வழியில் சுற்றிக்கொண்டிருந்த பாம்பை 1 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

  ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்து உயிரிழந்த சிறுவன் : 4 நாள் போராட்டத்திற்கு பிறகு பள்ளி புத்தகங்களுடன் நல்லடக்கம்!

  10 அடி நீளமுள்ள பாம்பில் தலையை பிடித்து கூரை வழியாக வெளியே எடுக்க முயன்றனர். வால் பகுதி வீட்டுக்குள் சுற்றிக்கொண்டதால் பாம்பை வெளியே எடுக்க அதிக நேரம் எடுத்தது.

  பின்னர்,  வீட்டில் பிடிபட்ட பாம்பை வனத்துறையினர் ஒரு பையில் எடுத்துச் சென்று அருகில் உள்ள மலைப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

  காரையூர் பகுதியில் வீட்டின் சமையல் அறைக்குள் மலை பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

  செய்தியாளர் : ர.ரியாஸ்  (புதுக்கோட்டை)

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Pudukkottai, Python