முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / வான்கோழியை விழுங்க முயன்ற 10 அடி நீள மலைப்பாம்பு.. புதுக்கோட்டையில் சம்பவம்

வான்கோழியை விழுங்க முயன்ற 10 அடி நீள மலைப்பாம்பு.. புதுக்கோட்டையில் சம்பவம்

வான்கோழியை விழுங்க முயன்ற 10 அடி நீள மலைப்பாம்பு

வான்கோழியை விழுங்க முயன்ற 10 அடி நீள மலைப்பாம்பு

Pudukkottai News : 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று  வான்கோழியை முழுங்க முயற்சித்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூர் குறிச்சிப்பட்டியை சேர்ந்தவர் ஜெயந்த். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் வான்கோழி, ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை தோட்டத்தில் வான்கோழி ஓன்று தொடர்ந்து கத்திக்கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட ஜெயந்த் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று  வான்கோழியை முழுங்க முயற்சித்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெய்ந்த் பொதுமக்கள் உதவியுடன் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குபையில் அடைத்தார். பின்னர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.

இதையும் படிங்க : விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் - உடலை வாங்க உறவினர் மறுப்பு!

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசனிடம் பொதுமக்கள் மலைப்பாம்பை ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு நார்த்தாமலை காப்புகட்டில் கொண்டு விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு  ஏற்பட்டது.

செய்தியாளர் : ரியாஸ் - புதுக்கோட்டை

First published:

Tags: Pudukkottai, Python