மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது காதலனின் வீட்டிற்கு சென்று மிரட்டிய வளர்ப்பு தந்தையை காதலனும், அவரது நண்பர்களும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கோபாலன்கடை அம்மா நகரை சேர்ந்தவர் ராஜா. பிரபல ரவுடியான ராஜா, ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த 2 மகள்களுக்கும் ராஜா வளர்ப்பு தந்தையாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் ராஜா தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் கோபாலன்கடை மெயின்ரோடு அருகே சென்றபோது இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து என பல இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணையில் வளர்ப்பு மகளின் காதலே கொலைக்கான காரணம் என்பது தெரிந்தது. ராஜாவின் வளர்ப்பு மகளும், அதேபகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். மகளின் காதலுக்கு ராஜா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, பிரகாஷ்ராஜையும் கண்டித்துள்ளார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜா, பிரகாஷ்ராஜின் வீட்டிற்கு சென்று, காதலை கைவிடாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
மேலும் கொலை சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு சென்று காதலை விட்டுவிடும்படியும் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என ராஜா மிரட்டியுள்ளார். ஆத்திரம் அடைந்த பிரகாஷ்ராஜ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜாவை படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன், தங்கமணி, தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பைக்குகளையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். பிரகாஷ்ராஜ் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Love issue, Murder case