முகப்பு /செய்தி /புதுச்சேரி / இளம்பெண்கள் போட்டோக்களை அனுப்பி டெலிகிராமில் வலை.. சிக்கும் நபர்களிடம் லட்சங்களை சுருட்டிய இளைஞர் கைது

இளம்பெண்கள் போட்டோக்களை அனுப்பி டெலிகிராமில் வலை.. சிக்கும் நபர்களிடம் லட்சங்களை சுருட்டிய இளைஞர் கைது

பாண்டிச்சேரி இளைஞர் கைது

பாண்டிச்சேரி இளைஞர் கைது

Puducherry crime news | புதுச்சேரியில் டெலிகிராமில் குழு அமைத்து இளம்பெண்களின் போட்டோ அனுப்பி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் டெலிகிராம் குழு மூலம் பெண்கள் அனுப்பி வைக்கப்படும் என கூறி பல ஆண்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை சுருட்டும் இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

"ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும்" என்ற வாசகத்திற்கு ஏற்ப பெண்கள் மீது இச்சை கொண்ட ஆண்களை குறிவைத்து புதுச்சேரி இளைஞர் ஒருவர் ஆயிரக்கணக்கில் பணத்தை சுருட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தங்கையின் புகைப்படம் டெலிகிராம் (Telegram) குழு ஒன்றில் பகிரப்பட்டு 4,500 கொடுத்தால் 6 மணி நேரத்துக்கு  புக் செய்து தங்களுடன் அனுப்பி வைக்கப்படும் என டெலிகிராம் குரூப்பில் வந்துள்ளது.  சம்பந்தப்பட்டவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. புதுச்சேரி கல்லூரி பெண்கள் என பல பெயர்களில் 10-க்கும் மேற்பட்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு அதில் சில இளம்பெண்களின் படம், ஊர், ரேட் ஆகியவை பதிவிடப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ந்த போலீஸார்  உடனடியாக அந்த க்ரூப் அட்மின் -க்கு ஸ்கெட் போட்டனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த அரவிந்தன்(20)  என்ற இளைஞர் இந்த மோசடி வேலைகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது.  telegram பக்கத்தை உருவாக்கி, சமூக வலைதளங்களில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய இளம் பெண்களின்  புகைப்படங்களை பயன்படுத்தி,  மேற்கண்ட பெண்ணை புக் செய்ய எவ்வளவு பணம் என்ற விவரத்தையும் அதில் பதிந்துள்ளார். இதையடுத்து டெலிகிராமில் வருகின்ற புகைப்படத்தை பார்த்த இளைஞர்கள் இந்த நபரை டெலிகிராமில் தொடர்பு கொள்கிறார்கள். மேலும் அரவிந்தனுடைய பெயரோ புகைப்படமோ செல் நம்பரோ பேங்க் அக்கவுண்ட் யாரும் தெரிந்து கொள்ளாத படி அவர்  telegram அக்கவுண்ட்டை உருவாக்கி உள்ளார்.

மேற்படி தொடர்பு கொள்கிற நபரை, தான்  அனுப்பும்  லிங்கை பயன்படுத்தி UPI ID மூலமாக பணத்தை அனுப்புங்கள். நீங்கள் பணத்தை போட்டவுடன் உங்களுக்கு அந்த புகைப்படத்தில் இருக்கின்ற பெண் நீங்கள் சொல்கிற இடத்துக்கு அனுப்பி வைக்கிறேன் என்று telegram மெசேஜில் பதில் கூறியுள்ளார். இதை நம்பி பணத்தை அனுப்பியவுடன் பணம் அனுப்பிய நபரை டெலிகிராமில் பிளாக் செய்துள்ளார். மேலும் பணம் அனுப்பிய  விவரம், பணம் எங்கு சேர்ந்தது, தொலைபேசி எண்கள் போன்ற எந்த விவரமும் தெரியாததால் பணத்தை இழந்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று அப்போது தான் உணருகிறார்கள்.

இதையும் படிக்க :  கள்ளக்காதல் ஜோடி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை..

ஏமாந்த சம்பவத்தை காவல்துறையில் சென்று புகாராக கொடுத்தால் பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்தில் பணத்தை இழந்தவர்கள் யாரும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கொடுத்த புகாரில்  போலீசார் அரவிந்தனை கைது செய்து அவர் உபயோகப்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து, புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி  மோகன் முன்பு ஆஜர்ப்படுத்தி  காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இதே போல் 5 க்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 1,30,000., 50,000., 76,000 என சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களில் எத்தனை பேர் எவ்வளவு லட்சம் இழுந்துள்ளனர் என போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர். ஆன்லைன் ஸ்கேம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில், புதுச்சேரியில் புதிய யுத்தியாக பெண்களின் புகைப்படத்தை வைத்து பணத்தை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Cyber crime, Online crime, Puducherry