Home /News /puducherry /

பரீட்சையில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவன் மீது பொறாமை... சக மாணவியின் தாய் செய்த கொடூரச் செயல்

பரீட்சையில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவன் மீது பொறாமை... சக மாணவியின் தாய் செய்த கொடூரச் செயல்

கொலை வழக்கில் கைதான சகாயராணி

கொலை வழக்கில் கைதான சகாயராணி

விசாரணையில் மாணவன் நன்றாக படித்த காரணத்தால் சக மாணவியின் தாய் இதுப்போன்ற கொடூர செயலில் செய்தது தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
சிறுவன் பரீட்சையில் முதல் மதிப்பெண் வாங்கியதால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சக மாணவியின் அம்மா சிறுவனிடம் குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து கொடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை குடித்த சிறுவன் உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் நகரப் பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வரும் தம்பதியினர் ராஜேந்திரன்- மாலதி. இவர்களுடைய  மகன் பால மணிகண்டன். காரைக்கால்  நேரு நகரில் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். காலை 11:00 மணி அளவில் ஒரு பெண்மணி பள்ளி வாசலில் வந்து பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியரிடம், 8ம் வகுப்பு படிக்கும் பால மணிகண்டனிடம் குளிர்பானத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார்.

அவர் உடனடியாக வகுப்பறையில் இருந்த பால மணிகண்டனிடம் அதனை கொடுத்துள்ளார். சிற்றுண்டி இடைவேளையில் அந்த குளிர்பானத்தை பால மணிகண்டன் குடித்துள்ளான். நேற்று பள்ளி ஆண்டு விழா என்பதால் மதியம் அனைத்து மாணவர்களும் விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பால மணிகண்டன் வீட்டுக்கு செல்லும்போது வீட்டில் வாந்தி எடுத்துள்ளான். அதனைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ALSO READ | கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தொழிலதிபர் சடலமாக மீட்பு.. சென்னையில் பயங்கரம்

பெற்றோர் மற்றும் உறவினர்கள் குளிர்பானத்தை யார் கொடுத்தது என்று விசாரித்தனர். அப்போது கேட்டில் இருந்த வாட்ச்மேனிடம் ஒரு பெண்மணி வந்து கொடுத்தாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி மூலம் அதனை உறுதிப்படுத்தியதையடுத்து  காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். விசாரணையில் 8ம் வகுப்பில் படிக்கும் மாணவி அருள் மேரியின் அம்மா குளிர்பானத்தை கொடுத்தது தெரிய வந்தது. அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் முன்னுக்கு முரணான தகவலை தெரிவித்ததாகவும் குளிர்பானத்தை நான் கொடுக்கவில்லை என்றும் பிஸ்கட் மட்டுமே தான் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சிசிடிவி காட்சியில் அவர் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணை செய்ததில் பால மணிகண்டன் நன்றாக படிப்பதாகவும் தற்போது நடைபெற்ற பரீட்சையில் அவர் முதல் மதிப்பெண் பெற்றதாக தெரிய வருகிறது. அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் மாணவியின் அம்மா அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாக கொண்டுள்ளதாகவும் அது போல் இதுவும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி