புதுச்சேரியில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்த சுனாமி என்னும் ஆழிப்பேரலை 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை தாக்கியது.
இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணவில்லை.
தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுனாமி தாக்குதலில் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக நாகப்பட்டினம், சென்னை, கடலூர் பகுதிகளில் உயிர்ப்பலியை தாண்டி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் சேதமானது.
சுனாமியால் குழந்தைகளை இழந்த பெற்றோரும், பெற்றோரை இழந்த குழந்தைகளும் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்று எழுந்த மரண ஓலம் அடங்க பல ஆண்டு காலம் ஆனது.
இன்னும் துயரச் சுவடுகள்தான் மறையவே இல்லை என்றாலும், 18 ஆண்டுகளாக இன்றும் கடற்கரையோரம் அந்த சோக கீதம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.
இன்றைக்கு சென்னை முதல் குமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள், கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, இறந்துபோனவர்களுக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், மீனவ அமைப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களுடைய ஆறுதலையும் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அந்த வகையில் புதுச்சேரி கடலோரப் பகுதியில் மீனவர் மக்கள் சுனாமியால் உயிரிழந்த தங்களின் உறவினர்களுக்கு கடலில் பால் ஊற்றியும் பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர். ஒரு சிலர் தங்களின் குடும்பத்தின் இழப்புகளை கண்ணீர் மல்க அழுது கொண்டே அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
செய்தியாளர் : பிரசாந்த் - புதுச்சேரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry