காரைக்காலில் இருந்து துபாய்க்கு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கீழ காசாக்குடி கிராமத்தை சேர்ந்த தேவதாஸ். இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடைபெறும் கலை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர்.
இந்த நிலையில் தேவதாசின் இரண்டாவது மகள் அருணா திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த தனியார் அமைப்பு மூலமாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த ஆண்டு ஜூன் மாதம் துபாயில் உள்ள அபுதாபிக்கு சென்றுள்ளார். தொடர்ந்துஅங்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
இதற்கிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வீட்டில் உள்ளவர்களை தொலைபேசியில் அழைத்த அருணா தான் விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்தநிலையில் 24-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அருணாவுடன் சென்றிருந்த அவரது தோழிகள் சிலர், அருணா உடல் நிலை சரியில்லாமல் திடீரென இறந்து விட்டதாக அவரது தந்தை மற்றும் கணவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர்.
இதையும் வாசிக்க: ஒரே நொடி.. முடிந்த வாழ்க்கை.. நடனமாடியபோது உயிரிழந்த 19 வயது இளைஞர் - ஷாக் வீடியோ!
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அருணாவை துபாய்க்கு அனுப்பி வைத்த சென்னை தனியார் அமைப்பை தொடர்பு கொண்டபோது அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை எனத் தெரிகிறது.
அருணாவின் தந்தை மற்றும் சகோதரிகள், ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று மர்மமான முறையில் உயிரிழந்த அருணாவின் உடலை துபாயில் இருந்து மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். துபாய்க்கு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்த பெண் கலைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் காரைக்காலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Karaikal