ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

துடைப்பத்துடன் மதுபான கடையை முற்றுகையிட்ட பெண்கள்.. புதுச்சேரியில் பரபரப்பு...

துடைப்பத்துடன் மதுபான கடையை முற்றுகையிட்ட பெண்கள்.. புதுச்சேரியில் பரபரப்பு...

துடைப்பத்துடன் சென்ற பெண்கள்

துடைப்பத்துடன் சென்ற பெண்கள்

Puducherry News : புதுச்சேரியில் துடைப்பத்துடன் மதுபான கடையை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் அரசானது ஏராளமான மதுபானக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் உழவர்கரை பகுதியில் தேவாலயங்கள், கோயில்கள், பள்ளிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மதுபான கடையை திறக்க அனுமதி கொடுத்து மதுபான கடையும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் மதுக்கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஊர் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. புதுச்சேரிக்கு கூடுதலாக 50,000 தடுப்பூசி வழங்க கோரிக்கை!

ஆனால், இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை மூடக்கோரி, புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை நோக்கி கையில் கட்டை மற்றும் தொடப்பத்துடன் சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அப்போது பெண்களை போலீசார் வழிமறித்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. தொடர்ந்து பெண்கள், “யாரையும் கடைக்கு அனுமதிக்க மாட்டோம்” என்று கடை முன்பு கையில் கட்டை மற்றும் துடைப்பத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் : பிரசாந்த் - புதுச்சேரி

First published:

Tags: Local News, Puducherry