ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

ஆசிட் வீச்சு கோரத்தை பிரதிபலிக்கும் ஒப்பனை.. வைரலாகும் இளம்பெண்ணின் புகைப்படங்கள்!

ஆசிட் வீச்சு கோரத்தை பிரதிபலிக்கும் ஒப்பனை.. வைரலாகும் இளம்பெண்ணின் புகைப்படங்கள்!

இளம்பெண் கற்பகத்தின் ஒப்பனை

இளம்பெண் கற்பகத்தின் ஒப்பனை

ஆசிட் வீச்சுக்குள்ளான பெண்களுக்கு ஆதரவாகவும், ஆசிட் வீச்சு கலாசாரத்திற்கு எதிராகவும் புதுச்சேரியில் இளம்பெண்  வெளியிட்டுள்ள ஒப்பனை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

மேற்கத்திய நாடுகளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ஆலோவீன் தினம். ஆலோவீன் (Halloween ) என்பது  அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இந்த ஹலோவீன் தினம் தற்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பலவற்றிலும் ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 31 அன்று விதவிதமான முகமூடிகளுடனும், ஒப்பனைகளுடனும் எடுக்கப்பட்ட வழக்கமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமை நிரப்பிக்கொண்டிருக்கின்றனர்.

இதில், புதுச்சேரி நிகழ்ச்சி வர்ணனையாளர்களில் ஒருவரான இளம் பெண் கற்பகம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டதைப் போல தன்னையே ஒப்பனை செய்துகொண்டு பதிவேற்றியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பலரையும் கவனத்தை ஈர்த்துள்ளது. முகத்தில் ஒருபக்கம் ஆசிட் பாதிப்பு, மறுபக்கம் வழியும் கண்ணீர் என இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஆசிட் தாக்குதலின் கோரத்தை தத்ரூபமாக வெளிப்படுத்துகின்றன.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி படிப்பை முடித்துள்ள இவர்,பெண்களின் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளும் வலி மிகுந்ததுதான் என்றாலும், அமிலத் தாக்குதல் எனும் ஆசிட் வீச்சு கொடூரமானது. தங்கள் உரிமையைப் பெற நினைக்கும் பெண்கள் மீது நடத்தப்படும் இந்த குரூரத் தாக்குதல், அவர்களை உயிருள்ள சடலங்களாக்கி வீட்டுக்குள் முடக்கி விடுகின்றன என கவலையுடன் கூறுகிறார் கற்பகம்.

இது தொடர்பாக அவர் கூறுகையிஸ், "ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானவர்கள், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், திருநங்கைகள் என இன்றும் சமூகம் முழுமையாக ஏற்கத் தயங்கும் பட்டியலில் இவர்களும் இருக்கிறார்கள். செய்யாத தவறுக்காக சமூகத்தை எதிர்கொள்ள தயங்கிய அவர்கள், இப்போது ஃபீனிக்ஸ் பறவைகளாக பறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்தான் நம் சமூகத்திற்கு இன்னும் வரவில்லை. காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும், திருமணம் செய்து கொள்ள மறுக்கும் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் ஆசிட் தாக்குதலுக்கு எதிராக, எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க: திங்கள், செவ்வாய் கிழமைகளில் மிக கனமழை இருக்கு... வானிலை மையம் அலெர்ட்

அதற்கான என்னுடைய சிறு முயற்சிதான் இது. அதற்கு  எழுத்து, போட்டோ என என் முன் இரண்டு வலிமையான வழிகள் இருந்தன. ஆனால் இவை இரண்டின் வழியாகவும் பல போராளிகள்  இந்த தாக்குதலை அக்குவேர் ஆணிவேராக பிரித்து வீசி எறிந்துவிட்டார்கள் என்றாலும், நானும் அந்த வரிசையில் கடைசியாக நிற்க முடிவெடுத்தேன். என்னுடைய நட்பு வட்டத்தில் நிறைய மேக்கப் ஆர்டிஸ்டுகள் இருக்கிறார்கள் என்பதால், ஆசிட் தாக்குதலுக்கு எதிராக போட்டோ மூலம் எனது எதிர்ப்பை பதிவு செய்ய முடிவெடுத்தேன்" என துணிச்சலாக கூறுகிறார் கற்பகம்.

Published by:Kannan V
First published:

Tags: Halloween, Puducherry, Viral News