Home /News /puducherry /

விநாயகர் சதூர்த்தி திருவிழா... புதுச்சேரியில் சூடு பிடித்துள்ள விநாயகர் சிலைகள் விற்பனை...

விநாயகர் சதூர்த்தி திருவிழா... புதுச்சேரியில் சூடு பிடித்துள்ள விநாயகர் சிலைகள் விற்பனை...

புதுச்சேரியில் சூடு பிடித்துள்ள விநாயகர் சிலைகள் விற்பனை...

புதுச்சேரியில் சூடு பிடித்துள்ள விநாயகர் சிலைகள் விற்பனை...

Puducherry | வருகிற 31-ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
காரைக்காலை அடுத்துள்ள நிரவிப் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக விநாயகர் சிலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி இங்கு சிலைகள் செய்யப்படுகின்றன. இங்கு ஒரு அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு விதமான வண்ணங்களில் பல வடிவங்களில் செய்யப்பட்டுள்ள வித, விதமான விநாயகர் சிலைகள் காண்பவரை கவர்ந்து இழுக்கிறது .   

விழுப்புரத்திலிருந்து விநாயகர் சிலைகளுக்கான தலை, துதிக்கை உள்ளிட்ட பாகங்கள் கொண்டுவரப்பட்டு இங்கு ஒன்று சேர்க்கப்பட்டு சிலைகள் செய்யப்பட்டுள்ளன.  சிலைகளை தண்ணீரில் கரைக்கும்போது மாசு ஏற்படுவதை தவிர்க்க குச்சி மற்றும் கிழங்கு மாவு கொண்டு இந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட  தம்பி முருகனை சேர்த்து அணைத்தபடி இருக்கும் விநாயகர் சிலைகள் விரும்பி வாங்கப்படுகிறது. சிங்கம், அன்னம், மயில், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆஞ்சநேயரை வாகனமாக கொண்ட விநாயகரும்,  பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த மூஞ்சூறு (எலி)  வாகனத்திலும் விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. நீண்ட துதிக்கையும், பெருத்த தொந்தியும் கொண்ட விநாயகர் சிலையை கண்டாலே ஆனந்தம் பொங்குகிறது.

கடந்த 3 மாதமாக 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதால் விநாயகர் சிலையைக் காணவும், அதனை வாங்கி செல்லவும் ஏராளமானோர்  நிரவிப் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.



அவர்கள் விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர். 10 அடி உயரத்தில் காட்சி தரும் விநாயகர் சிலைகள் வியக்க வைக்கின்றன. இங்கு தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாகப்பட்டினம் , காரைக்கால், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருவாரூர், முத்துப்பேட்டை, தஞ்சாவூர், சிதம்பரம், சீர்காழி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Also see...மருத்துவ மாணவர்கள் தற்கொலைகளுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும்

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகளின் விற்பனை இங்கு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பல்வேறு விதிமுறைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்ற நிலையில் சிலைகள் பெருமளவில் விற்கப்படவில்லை என்றும் இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பிரச்சனை இல்லாத நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாட உள்ளதாக சிலைகள் வாங்க வந்த பக்தர்கள் தெரிவித்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Puducherry, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

அடுத்த செய்தி