ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

வாரிசு பேனரில் கோஷ்டி மோதலா? இடம்பிடிக்காத புஸ்ஸி ஆனந்த்.. டாப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர்.!

வாரிசு பேனரில் கோஷ்டி மோதலா? இடம்பிடிக்காத புஸ்ஸி ஆனந்த்.. டாப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர்.!

வாரிசு படத்திற்கு வைக்கப்பட்டுள்ள பேனர்

வாரிசு படத்திற்கு வைக்கப்பட்டுள்ள பேனர்

நடிகர் விஜய்யின் 66 வது படம் வாரிசு, பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள வாரிசு படத்திற்கு ரசிகர்கள் பேனர் வைத்துள்ளதால் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி.ஆனந்தின் பெயர் மற்றும் புகைப்படத்தை நீக்கியுள்ளனர்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் பொதுமக்களுக்கு ரத்த தான் முகாம் உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போது நடிகர் விஜய்க்கு உறுதுணையாக இருப்பவர் விஜய் மக்கள் இயக்கம் தலைவர் புஸ்ஸி.ஆனந்த்.  சமீபத்தில் நடந்த வாரிசு இசை வெளியிட்டு விழாவில் கூட எனது வழிகாட்டி என மேடையில் விஜய் குறிப்பிட்டு ரசிகர்கள் செய்யும் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்காட்டி விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில்  நடிகர் விஜய்யின் 66 வது படம் வாரிசு, பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. இதனை வரவேற்கும் விதமாக நகரம் மற்றும் கிராமங்கள் முழுவதும் ரசிகர்கள் பேனர் மற்றும் கட் அவுட்டுகளை வைத்து கொண்டாடி வருகின்றனர். அனைத்து பேனர்களிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்சி ஆனந்த்தின் படம் இடம் பெற்றுள்ளது. ஆனால் முதலியார்பேட்டை- கடலூர் சாலையில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விளம்பரத்தின் புஸ்ஸி. ஆனந்த்திற்கு பதிலாக விஜய் தந்தையும் இயக்குனருமான S.A. சந்திரசேகரின் படம் இடம் பெற்றுள்ளது.

விஜய்யின் 66 வது படத்தை குறிக்கும் வகையில் அனைத்து திரைப்படங்களிலும் இடம் பெற்ற  விஜய்யின் படங்களை ரசிகர்கள்  வைத்துள்ளனர். விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி. ஆனந்த் மீது இயக்குனர் சந்திர சேகர் அடுக்கடுக்கான புகார்களை வைத்தார். அது முதல் ஒரு கோஷ்டி ஆனந்தை புறக்கணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மோதல் தற்போது விளம்பரமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


First published:

Tags: Actor Vijay, Sa chandrahekhar, Varisu