ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

ஒரே பைக்கில் தல, தளபதி- புதுச்சேரியில் ஒன்றிணைந்த விஜய், அஜித் ரசிகர்கள்

ஒரே பைக்கில் தல, தளபதி- புதுச்சேரியில் ஒன்றிணைந்த விஜய், அஜித் ரசிகர்கள்

விஜய், அஜித் பேனர்

விஜய், அஜித் பேனர்

Puducherry | புதுச்சேரியில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு படங்கள் வெற்றியடைய அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து 25 அடி உயரத்தில் பேனர் வைத்து ஒற்றுமையை வெளிப்படுத்தி உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு படமும், தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. துணிவு படத்தின் ட்ரைலர் 31-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரைலர் நாளைக்கு வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரங்களான இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், விஜய், அஜித் இருவரின் ரசிகர்களும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தற்போதே சண்டை போடத் தொடங்கியுள்ளனர். அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் வெளி வரும்போது அவர்களது ரசிகர்கள் போஸ்டர்கள் மற்றும் கட்-அவுட், பேனர்கள் வைப்பது வழக்கம்.

அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களில் பேனர்கள் வைத்து வரும் நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒன்றினைந்து பேனர் வைத்து ஒற்றுமையை வெளிப்படுத்தி உள்ளனர்.

புதுச்சேரி பஞ்சவடி மத்திய திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. பச்சை திராட்சையில் அலங்காரம்..!

காமராஜர் சாலையில் துணிவு மற்றும் வாரிசு படம் வெற்றி அடைய 25 அடி உயரத்தில் அஜித் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது போலவும் அதன் பின்னால் விஜய் அமர்ந்து செல்வது போன்றும் வாகன நம்பர் பிலேட்டில் தல-தளபதி என வாசகம் எழுதி தங்களின் ஒற்றுமையை வெளிப்ப்டுத்தி உள்ளனர்.

செய்தியாளர்: பிரசாந்த், புதுச்சேரி.

First published:

Tags: Local News, Puducherry