Home /News /puducherry /

ரூ.402 கோடி கடன் பாக்கி.. சிக்கலில் புதுச்சேரி அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் - அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ

ரூ.402 கோடி கடன் பாக்கி.. சிக்கலில் புதுச்சேரி அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் - அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ

பிப்டிக் நிறுவனம்

பிப்டிக் நிறுவனம்

Puducherry | பிப்டிக் நிறுவனத்திற்கு சேர வேண்டிய ரூ.402 கோடி நிலுவை தொகையினை வசூலிக்க நடவடிக்கை எடுத்து, வட்டி லாப சதவிகிதத்தை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரி அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான
பிப்டிக்(PIPDIC) நிறுவனம் கடந்த 1974ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனம் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க இடம் மற்றும் நிதியுதவி  அளித்து தொழில் வளர்ச்சிக்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.

பிப்டிக் நிறுவனம் தொழில் கடனுக்கு அளித்த வட்டியில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேல் லாபம் ஈட்டியதால் ரிசர்வ் வங்கி இந்நிறுவனத்தை வங்கி சார்ந்த நிறுவனமாக பதிவு செய்துகொண்டது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் வட்டியிலிருந்து வரும் லாபத்தின் சதவீதம் வெகுவாக குறைந்ததால் பிப்டிக் நிறுவனம் வங்கி சார்ந்த நிறுவனத்திற்கான சான்றிதழை ரிசர்வ் வங்கியிடம் திரும்ப சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, சான்றிதழ் திரும்ப அளிக்கப்பட்டுவிட்டது .தொலைக்காட்சி பெட்டியே தயாரித்த இந்நிறுவனம் இன்று செயலற்று வெறும் கட்டிடமாக நிற்கிறது.

காரணம் பிப்டிக் நிறுவனத்தில் கடன் பெற்ற அரசு பொது நிறுவனங்கள் மற்றும் பிற வகை கடன் நிலுவை தொகை 402 கோடி ரூபாய். ஆர்டிஐ மூலம் தகவல்கள் கேட்டதற்கு, அரசு பொது நிறுவனங்களான டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷன் ரூ.88.35 கோடி, கூட்டுறவு சர்க்கரை ஆலை – ரூ.35.70 கோடி, ஜெயபிரகாஷ் நாராயன் மில் – ரூ.25.46 கோடி, ஏனாமில் மூடப்பட்ட ரீஜின் செராமிக் – ரூ.8.63 கோடி என மொத்தம் ரூ.158.15 கோடி நிலுவைத்தொகை வைத்துள்ளது.

இதுபோல் சிறு, குறு தொழில்கள் பொதுவான கடன், கல்விக்கடன், வாகனக் கடன் பெற்றவர்களின் நிலுவைத் தொகை 244.1 கோடி என மொத்தம் ரூ.402 கோடி நிலுவை தொகை உள்ளதாக RTI தகவல் அளித்துள்ளது.

தொழில் முனைவோர்க்கு கடன் உதவி அளித்து வந்த பிப்டிக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும் அரசு பொது நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் கடன் அளித்துவிட்டு, வட்டியை உரிய காலத்தில் வசூலிக்க நடவடிக்கை எடுக்காததால்தான் வட்டியின் லாப சதவிகிதம் குறைந்து, வங்கி சார்ந்த நிறுவனத்திற்கான சான்றிதழை திரும்ப அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில் தொடங்க கடன் உதவி அளித்து வரும் பிப்டிக், நஷ்டத்தில் இயங்கி மூடும் நிலையில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் கடன் வழங்கியுள்ளது ஏற்புடையதா? அரசின் இதுபோன்ற தவறான முடிவுகளால் தான் பல அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டது. இதே நிலை நீடித்தால் பிப்டிக் நிறுவனமும் மூடப்படும் நிலை ஏற்படும்.

எனவே, பிப்டிக் நிறுவனத்திற்கு சேர வேண்டிய ரூ.402 கோடி நிலுவை தொகையினை வசூலிக்க நடவடிக்கை எடுத்து, வட்டி லாப சதவிகிதத்தை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.

Also see... அண்ணாமலை ஒரு படித்த முட்டாள் - அமைச்சர் செந்தில்

இது குறித்து துணைநிலை ஆளுநர் தலைமை செயலர், தொழில் துறை செயலர் ஆகியோருக்கு   மனு அனுப்பியுள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Puducherry, RTI

அடுத்த செய்தி