ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

“மது குடிக்க காசில்ல..” கோயில் கலசத்தை திருடி விற்க முயன்ற இளைஞர்கள் கைது!

“மது குடிக்க காசில்ல..” கோயில் கலசத்தை திருடி விற்க முயன்ற இளைஞர்கள் கைது!

கோயில் கலசத்தை திருடியவர்கள்

கோயில் கலசத்தை திருடியவர்கள்

செம்பு உலோகத்தால் செய்யப்படும் கோயில் கலசங்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்பதால் அவற்றை திருடியது தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

மது குடிக்க பணமில்லாததால் கோயில் கலசத்தை திருடி, விற்பதற்காக வண்டியில் கொண்டு சென்ற இளைஞர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். கோயில் கலசத்தை விற்பதற்காக மீன்பாடி வண்டியில் கொண்டு சென்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட கொசப்பாளையத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த புதன்கிழமை இக்கோயிலின் கோபுரத்தின் மீது இருந்த கலசம் திடீரென மாயமாகி இருந்தது.  இது தொடர்புக் உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

கோயில் அமைந்திருக்கும் தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 2 பேர் கோயில் கலசத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது. நள்ளிரவு 1:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் மீன்பாடி வண்டியில் கோயில் உள்ள தெருவில் செல்வதும் பின்னர் கோயில் கோபுர கலசத்தை அதே வண்டியில் திருடிக்கொண்டு செல்வதும் பதிவாகி இருந்தது.

கலசத்தை திருடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முதலியார்பேட்டை, உடையார்தோப்பை சேர்ந்த சரவணன் என்ற விக்னேஷ், லெப்போர்த் வீதியை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் சிக்கினர். இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் திருடிய கோயில் செம்பு கலசத்தையும் பறிமுதல் செய்தனர்.

மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் கோயில் கலசத்தை திருடி விற்க முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. செம்பு உலோகத்தால் செய்யப்படும் கோயில் கலசங்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்பதால் அவற்றை திருடியது தெரியவந்துள்ளது.

First published:

Tags: Crime News, Puducherry, Temple, Theft