ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

ஏலம் விடப்பட்ட புல்லட்டை போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை- 2 பேர் கைது

ஏலம் விடப்பட்ட புல்லட்டை போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை- 2 பேர் கைது

போலி ஆவணக்கள் மூலம் விற்கப்பட்ட புல்லட்

போலி ஆவணக்கள் மூலம் விற்கப்பட்ட புல்லட்

அந்த புல்லட் டில்லி போலீசார் மூலம் ஏலத்தில் விடப்பட்ட வாகனம் என்றும், அந்த வாகன பதிவு சான்றுகள், நம்பர் பிளேட் போலியாக தயார் செய்து ஏமாற்றியது தெரியவந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  போலீஸ் ஏலத்தில் விட்ட புல்லட்டை போலி சான்றுகள் மூலம் விற்று முதியவரை ஏமாற்றிய வழக்கில் இருவரை புதுடில்லியில் போலீசார் கைது செய்தனர்.

  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், மாகி பிராந்தியத்தின்  செம்ப்ரா பகுதியை சேர்ந்தவர் பிரதீப்(55). இவர், தனது மகனுக்கு கடந்த 2018 ம் ஆண்டு, புல்லட் வாங்கி தர எண்ணினார். அப்போது அவரின் மகன் மூலம், மொபைலில் கேரளா மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த ச.லினேஷ் ஜேம்ஸ்(35) என்பவர் பழக்கமானார். அவர், தன்னிடம் ஒரு புல்லட் இருப்பதாக கூறி, அதற்கு ரூ.68 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.

  கைது செய்யப்பட்டவர்கள்

  இந்த பணத்தை தந்து, பிரதீப் வாகனத்தை வாங்கிய பின், அந்த வாகன சான்றுகள் போலி என்பது தெரியவந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதீப் அளித்த புகாரின் பேரில், பள்ளூர் போலீசார் வழக்குப் பதிந்தனர். விசாரணையில், அந்த புல்லட் டில்லி போலீசார் மூலம் ஏலத்தில் விடப்பட்ட வாகனம் என்றும், அந்த வாகன பதிவு சான்றுகள், நம்பர் பிளேட் போலியாக தயார் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. இந்த வழக்கில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்., 10ம் தேதி கொச்சின் விமான நிலையத்தில் லினேஷ் ஜேம்சை போலீசார் கைது செய்தனர்.

  இதையும் படிக்க : `ஸ்லோ பாய்சன்’ கணவனுக்கு போட்ட ஸ்கெட்ச்..  விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற பெண்

  இவரை விசாரித்ததில், பல உண்மைகள் வெளிவந்தன. இச்சம்பவத்தில், புதுடில்லி, கரோல்பாக் பகுதியை சேர்ந்த அஷாக்அலி மகன் அஷ்முகமது (எ) பாபுகான்(40) மெக்கானிக். இவரும், மனோகர்லால் மகன்கிஷோர்குமார் (எ) அசோக்(55) ஆகியோர் சேர்ந்து, போலீஸ் ஏலத்தில் எடுத்த புல்லட் வாகனத்திற்கு போலி சான்று தயார் செய்து விற்று மோசடி செய்தது தெரியவந்தது.

  இதையடுத்து எஸ்.பி.தீபிகா உத்தரவின் பேரில், மாகி எஸ்.பி., ராஜசங்கர்வல்லட்  தலைமையிலான போலீசார், புதுடில்லி சென்று, குற்றவாளிகளை கைது செய்ய 8 நாட்கள் அங்கு முகாமிட்டனர். கடந்த 11ம் தேதி, பாபுகான், கிஷோர்குமார் ஆகியோரை, போலீசார் கைது செய்து, மாகிக்கு  அழைத்து வந்தனர். இவ்வழக்கு குற்றவாளிகளை திறமையாக கண்டுபிடித்த போலீசாரை,  எஸ்.பி., தீபிகா பாராட்டினார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Crime News, Delhi, Royal enfield