ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

காக்டெய்ல், ஜாவா உள்ளிட்ட அலங்கார பறவைகளை வளர்த்து சுயமாய் சம்பாதிக்கும் திருநங்கை...

காக்டெய்ல், ஜாவா உள்ளிட்ட அலங்கார பறவைகளை வளர்த்து சுயமாய் சம்பாதிக்கும் திருநங்கை...

திருநங்கை -  ஜெம்சா ராணி

திருநங்கை - ஜெம்சா ராணி

காக்டெய்ல், ஜாவா உள்ளிட்ட அலங்கார பறவைகளை வளர்த்து சுயமாய் சம்பாதித்து காரைக்காலில் வெற்றி நடை போடும் திருநங்கை. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

காரைக்கால் மாவட்டத்தில் மூன்று கிணற்று  கிழக்கு வீதியில் வசிப்பவர் ஜெம்சா ராணி. இவர் ஒரு திருநங்கை. அலங்காரப் பறவைகளை வளர்த்து விற்பனை செய்வதில் அனுபவ ரீதியான வல்லுநர். தற்போது அவர்  காக்டெயில், ஜாவா, லவ் பேர்ட்ஸ், மற்றும் ஆப்பிரிக்க வகை பறவைகளை தனது வீட்டிலேயே வளர்த்து வருகிறார்.

வட்டார வளர்ச்சி துறை மூலம் 20,000 ரூபாய் கடன் பெற்று இதனைத் தொடங்கியதாக தெரிவிக்கும் அவர், ஒரு ஜோடி பறவைகளை வளர்க்க கூண்டின் அளவு குறைந்தபட்சம் 3 அடி நீளம் மற்றும் 2 அடி அகலம் இருக்க வேண்டும். பறவைகள் நன்றாக வளர அந்த அளவு உதவும் என்றும் சிறிய கூண்டுகளில்  பறவைகளை வளர்த்தால் அவை ஆரோக்கியமாக இருக்காது என்றும் கூறுகிறார்.

பறவைகளின் ரகத்திற்கு மற்றும் நிறங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படும். ஒரு ஜோடி லவ் பேர்ட்ஸ் 350 ரூபாய், ஜாவா 500 முதல் 1000 ரூபாய், காக்டெயில் மற்றும் ஆப்பிரிக்கா பறவைகள் 1500 முதல் 5000 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. ஒரு பறவையின் குஞ்சுக்கு பருவம் முதல் பெரியதாகும் வரை சுமார் 300 முதல் 500 ரூபாய் வரை செலவாகும்.

ஆனால், குஞ்சுகளை காப்பாற்றுவதில் பெரும் சவால் உள்ளது. வானிலை மாற்றத்தால் சில பறவைகள் இறக்க நேரிடலாம். அந்த இழப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். பறவைகளின் பண்பறிந்து கண்காணிப்போடு பராமரித்தால் மட்டுமே லாபகரமாக இருக்கும். என அலங்கார பறவைகள் வளர்ப்பு குறித்து பல்வேறு செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார் ஜெம்சா ராணி.

அவர் தொடர்ந்து பேசுகையில் “பல திருநங்கைகள் உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஆனால் சமூகத்தில் எங்களுக்கு இடமளிக்க மறுக்கின்றனர். இதை மாற்றி நாங்களும் சமமான மனிதர்கள்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் " என்றார்.

Also see... கார்த்திகை அமாவாசை : புதுச்சேரி ஏனாம் ஆற்று பகுதியில் தீபம் ஏற்றி விடிய விடிய வழிபாடு

பறவைகளுக்கு, மென்மையான உணவாக சூரியகாந்தி விதைகள், ஊர வைத்த கோதுமை, கொண்டைக்கடலை, தினை ஒரு வேளை  கொடுக்கப்படுவதாகவும், திட உணவாக அவற்றை தானியங்களாக ஒரு வேளையும்,  கால்சியம் சத்து மிக அவசியம் என்பதால் கோழி முட்டை ஓடுகளை தீனியாக கொடுக்கலாம் எனவும் உணவு அளவு பறவையின் வயதிற்கு தகுந்தவாறு மாறுபடும் என்றும் தெரிவித்தர். என்றார்.

மேலும், தேவையான ஊட்டச்சத்துகளான ஜின்கோவிட், புரோட்டான் மற்றும் கேல்சிமேக்ஸ் ஆகியவற்றின் உபயோகம் குறித்தும் அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் தெரிவித்தார். பறவைகளின் ஆயுட்காலம் அவற்றின் ரகத்தை பொறுத்து மாறுபடும். காக்டெயில் சுமார் 12 ஆண்டுகளும், ஜாவா 5 ஆண்டுகளும் வாழக்கூடியது. நோய்கள் வந்தால் கொடுக்க வேண்டிய டெட்ராசைக்ளின் போன்ற  நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

Also see... நாக சைத்தன்யாவின் முதல் மனைவி குறித்து பேசிய சமந்தா..

அலங்கார பறவைகள் வளர்ப்பில் ராணியாக திகழும் ஜெம்சா ராணியிடம் காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து டாக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான மாணவர்கள் தொழில் முனைவோர் பயிற்சி பெற்று சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகள் என்றாலே ஏளனமாக பார்க்கும் சமுதாயத்தில் தாங்களும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அலங்கார பறவைகளை வளர்த்து சுயமாய் சம்பாதித்து வரும் ஜெம்சா ராணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதேபோலவே திருநங்கைகள் ஒரு சுய தொழிலைத் தேர்வு செய்து ஒவ்வொருவரும் சுயமாக சம்பாதித்து சமுதாயத்தில் உயர்வடைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Birds, Puducherry, Transgender