ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

மாண்டஸ் புயல் எதிரொலி : அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்... புதுச்சேரி அமைச்சர் அதிரடி உத்தரவு..!

மாண்டஸ் புயல் எதிரொலி : அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்... புதுச்சேரி அமைச்சர் அதிரடி உத்தரவு..!

சுற்றுலா தலங்கள் மூடல்

சுற்றுலா தலங்கள் மூடல்

Puducherry | புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை காரணமாக சுற்றுலா தலங்களை மூட சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உத்தரவிட்டுள்ளார். சுண்ணாம்பாறு படகு துறை, ஊசுடு ஏரி படகு துறை, பாண்டி மெரினா ஆகிய பொழுது போக்கு மற்றும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முழுக்க சுற்றுலா தலங்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவி வரும் மாண்டோஸ் புயலால் புதுச்சேரியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காற்றின் வேகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

புயல் காரணமாக புதுச்சேரியில் தாவரவியல் பூங்கா மற்றும் பாரதி பூங்கா ஆகியவை மூடப்பட்டன. புதுச்சேரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் ஆன நோணாங்குப்பம் கடற்கரை உட்பட அனைத்தும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

Also see... மாண்டஸ் புயல் எதிரொலி... சென்னை மாநகராட்சி முக்கிய சுற்றறிக்கை

புயலால் புதுச்சேரியில் உள்ள கடலில் அலைகளின் உயரம் பல அடி எழும்பியது. அத்துடன் சீற்றமும் அதிக அளவில் இருந்து வருகிறது. இதை வேடிக்கை பார்க்க ஏராளமானவர் குவிந்து வருகின்றனர்.

பலர் கடலின் அலை அருகே சென்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.  ஆபத்தை உணராமல் பலரும் கடற்கரையோரம் சுற்றி திரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cyclone Mandous, Puducherry, Tourist spots