முகப்பு /செய்தி /புதுச்சேரி / திருடுவதிலும் தனி ஸ்டைல்.. ரன்னிங்கில் தான் திருட்டே - பங்கு பிரிக்கும்போது சிக்கிய கில்லாடி பெண்கள்

திருடுவதிலும் தனி ஸ்டைல்.. ரன்னிங்கில் தான் திருட்டே - பங்கு பிரிக்கும்போது சிக்கிய கில்லாடி பெண்கள்

கைதான பெண்கள்

கைதான பெண்கள்

Puducherry News : பேருந்து, ஆட்டோக்களில் செல்பவர்களை மட்டும் குறி வைத்து திருடிய திருவண்ணாமலை பெண்கள் கைது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த நாகப்பன் என்பவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி தனது மனைவி குழந்தைகளுடன் புதுச்சேரிக்கு வந்துள்ளார். நேரு வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் மனைவிக்கு 3 பவுன் நகை வாங்கிக்கொடுத்துள்ளார்.  பின்னர் அங்கிருந்து புதிய பேருந்து நிலையம்  செல்வதற்காக டெம்போவில் சென்றுள்ளனர்.  அதே டெம்போவில் டிப்டாப் உடை அணிந்த 2 பெண்கள் ஏறினர்.

இந்நிலையில், அண்ணா சிலை அருகே டெம்போ வந்தபோது அதில் இருந்த 2 பெண்கள் அவசரமாக இறங்கி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த நாகப்பன் தனது மனைவியின் கையில் இருந்த கட்டை பையை வாங்கி பார்த்துள்ளார்.அப்போது அதில் வைத்திருந்த 3 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பார்வையிட்டனர். அப்போது 2 பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 2 பேரின் புகைப்படங்களை வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த மதன் என்பவரது மனைவி சோலையம்மாள்(30), நடராஜன் என்பவரது மனைவி காவேரி(39) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 2 பேரின் படங்களை புதுச்சேரி, தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

Also Read:  6 வருஷமா குழந்தை இல்லை.. வரதட்சனை கொடுமை.. தூக்கில் தொங்கிய இளம்பெண் கதறும் குடும்பத்தினர்

இதையடுத்து, அவர்கள் 2 பேரும் ஈரோடு பகுதியில்  திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், “முத்தியால்பேட்டை ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்த காயத்திரி என்பவரின் கவனத்தை திசை திருப்பி  பர்சை கடந்த 7.12.2022 மதியம் ஓடும் பஸ்சில் திருடியுள்ளனர். அதில் 1 பவுன் நகை, ரூ.4,500 ரொக்கம் இருந்தது. அந்த பணத்தை எடுத்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு பேருந்தில் வரும்போது வில்லியனூர் ஆரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி என்பவரது மனைவி கஸ்தூரி(37) என்பவரின் கவனத்தை திசைதிருப்பி அவரது பர்சை திருடியுள்ளனர்.அதில் இருந்து ஏடிஎம் கார்டும் பின்னால் பின் நம்பரும் இருந்துள்ளது. அதில் இருந்து ரூ.30,000 எடுத்து மோசடி செய்ததும் தெரியவந்தது

இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலி, ரூ.72,500 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவர் மீதும் தமிழகத்தில் பல வழக்குகள் உள்ளன. இவர்கள் திருடுவதற்கென தனி பாணி வைத்துள்ளனர். ஓடும்பேருந்து மற்றும் ஆட்டோக்களில் செல்பவர்களை மட்டும் குறி வைப்பார்கள். அப்படி குறி வைத்து ஒரே நாளில் இருவரிடம் பர்ஸ் திருடியுள்ளனர். இதில் தங்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை என்பதை உணர்ந்து மீண்டும் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.

டிசம்பர்  17ம் தேதி டெம்போவிற்கு காத்திருந்தபோது ஒருவர் தனது மனைவியிடம் "நகை பத்திரம்..நகை பத்திரம்" என கூறியுள்ளார். இதனை கேட்டவர்கள் பின் தொடர்ந்து குழந்தையிடம் பேசி திசை திருப்பி நகையை திருடி சென்றுள்ளனர். மீண்டும் ஈரோடு குளித்தலை சென்று வீட்டில் வைத்து திருடியதை பங்கு பிரிக்கும்போது பிடிப்பட்டது தெரியவந்தது.

பொது இடங்களுக்கு வருபவர்கள் காவல் துறையின் எச்சரிக்கைகளை கவனிக்க வேண்டும், ஏடிஎம் கார்டுகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும், பின் நம்பரை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற வங்கி அதிகாரிகளின் அறிவுரையை பின்பற்ற வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Local News, Puducherry