முகப்பு /செய்தி /புதுச்சேரி / புதுச்சேரியில் 4 கிராம் தங்க சங்கிலியை வாயில் போட்டு விழுங்கிய வடமாநில திருடன்... சிக்கியது எப்படி?

புதுச்சேரியில் 4 கிராம் தங்க சங்கிலியை வாயில் போட்டு விழுங்கிய வடமாநில திருடன்... சிக்கியது எப்படி?

கைதான திருடன்

கைதான திருடன்

Puducherry News : புதுச்சேரியில் நகை கடையில் திருடியபோது வாயில் போட்டு நகையை விழுங்கிய ஒடிசா வாலிபர் பிடிப்பட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவர் நெல்லுமண்டி சந்தில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 3ம் தேதி இவரது கடைக்கு இரவு 9 மணிக்கு வந்த 25 வயதுமிக்க வட மாநில வாலிபர் தங்க சங்கிலி வேண்டுமென கேட்டுள்ளார். ஊழியர்கள் விதவிதமான சங்கிலிகளை காண்பித்துள்ளனர். ஒவ்வொன்றாக பார்த்து அவர் கழுத்தில் அணிந்து பார்த்தார். இவை பிடிக்கவில்லை என அவர் கூறினார். இதனால் ஊழியர்கள் வேறு ஒன்றை எடுத்து வர சென்றனர்.

அப்போது அந்த வாலிபர் திடீரென 4 கிராம் தங்க சங்கிலியை தனது வாயில் போட்டு விழுங்கினார். இதனை கவனித்த ஊழியர்கள் அவரை பிடித்து பெரிய கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஒடிசாவை சேர்ந்த ராஜசேகர் சவுத் (25). என்பதும், கூலி தொழிலாளியான இவர் சுற்றுலா வந்தபோது  பணம் முழுவதும் செலவானதும் மது குடிக்க பணம்  இல்லாததால் பண தேவைக்காக அவர் நகைக்கடைக்கு நகை வாங்குவதுபோல் நடித்து நகையைத் திருடி சிக்கியுள்ளதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீசார் மருத்துவ சிகிச்சை மூலம் அவரது விழுங்கிய நகையை எடுத்தனர். இன்று அவர் சிகிச்சை முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

First published:

Tags: Crime News, Local News, Puducherry