Home /News /puducherry /

பைக்குக்கு இம்ஐ கட்ட பணமில்லாமல் கொள்ளையடித்த நபர் கைது - - CCTV-யில் சிக்கிய திருடர்

பைக்குக்கு இம்ஐ கட்ட பணமில்லாமல் கொள்ளையடித்த நபர் கைது - - CCTV-யில் சிக்கிய திருடர்

பைக்குக்கு இம்ஐ கட்ட பணமில்லாமல் கொள்ளையடித்த நபர் கைது - - CCTV-யில் சிக்கிய திருடர்

Puducherry | கடனில் எடுத்த பைக்கிற்கு மாத தவணை கட்ட  தனியார் தொழிற்சாலையில் திருடிய செங்கல் அறுக்கும் தொழிலாளி சிசிடிவி காட்சிகளால் சிக்கினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
    புதுச்சேரியில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் மர்ம நபர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டது அங்குள்ள சிசிடிவி மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    புதுச்சேரி சேதராப்பட்டில் இயங்கி வரும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலையின் பல்வேறு அறைகள் கொண்ட குடோனின் முதல் தளத்தில் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு நீர் மோட்டார், காப்பர் வயர்கள் மற்றும் ஃபேன்கள் திருட்டுப் போயிருந்தது.மேலும் திருட்டை மறைக்க அங்கு இருந்த சிசிடிவி கேமிராக்களை உடைத்திருந்தனர். இருப்பினும்  சிசிடிவி கேமிரா காட்சிகள் செல்போனில் இணைக்கப்பட்டிருந்ததால் அவற்றை கொண்டு உரிமையாளர் கோதண்டராமன் கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து அங்குள்ள விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் துத்தப்பட்டு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை மறித்து சோதனை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தார். மேலும் சிசிடிவி இருந்த வாலிபர் போல் இருந்ததால் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வாலிபர் செங்கல் சூளையில் வேலை செய்து வருவதும்,  கோட்டகுப்பம் அருகே உள்ள பெரிய முதலியார்சாவடி முருகன் கோயில் வீதி சேர்ந்த தமிழ்ச்செல்வன் வயது 18 என்பதும்  தெரியவந்தது.

    Read More : எச்சரிக்கை! இது இந்துக்கள் பகுதி.. மதப்பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை - இணையத்தில் வைரலாகும் பேனர்


    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் துத்திபட்டு தனியார் சிமெண்ட் கம்பெனி குடோனில் எலக்ட்ரிக்கல் பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.  தமிழ்ச்செல்வன் ஓட்டி வரும் பைக்கிற்கு மாதத் தவணை கட்ட தவறியதால் பைனான்ஸ் நிறுவனத்தினர் அவர் ஓட்டி வந்த பைக்கை திரும்ப பெற வந்தனர். அவர்களிடத்தில் ஒரு வாரத்திற்குள் பணத்தை செலுத்தி விடுவதாக கூறிய தமிழ்ச்செல்வன் பைக்குக்கு கட்ட வேண்டிய பணத்திற்காக சிமெண்ட் கம்பெனி குடோனில் உள்ளே புகுந்து எலக்ட்ரிக்கல் பொருட்களை திருடியது தெரியவந்தது.

    தமிழ்செல்வனை கைது செய்த போலீசார், அவர் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Crime News, Puducherry, Theft

    அடுத்த செய்தி