முகப்பு /செய்தி /புதுச்சேரி / மகன் பிறந்தநாளை கொண்டாட வாங்கிய கடனை அடைக்க திருட்டில் இறங்கிய பெயிண்டர்..!

மகன் பிறந்தநாளை கொண்டாட வாங்கிய கடனை அடைக்க திருட்டில் இறங்கிய பெயிண்டர்..!

கைதான மணிகண்டன்

கைதான மணிகண்டன்

மகன் பிறந்த நாள் கொண்டாடத்திற்கு வாங்கி கடனை அடைக்க பல் மருத்துவர் வீட்டில் திருடிய பெயிண்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் தனது மகனின் முதல் பிறந்தநாள் செலவிற்காக வாங்கிய கடனை அடைக்க திருட்டில் ஈடுபட்ட பெயிண்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி, நகரப்பகுதியான கந்தப்ப முதலியார் வீதியில் குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் பல் மருத்துவர் ஜெயக்குமார் (47). இவர் தனது மனைவி, மகள் மற்றும் அவரது தாயாருடன்  வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை குடும்பத்துடன் இவர்கள் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் இவரது வீட்டின் பின்பக்க கதவை கம்பியால் நீக்கி தனது தாய் தலை அருகே வைத்திருந்த 5 சவரன் தங்க சங்கிலி மற்றும் 2-செல்போன்கள் திருடி சென்றுள்ளார்.

அந்த திருடன் வெளியே செல்லும் போது ஏற்பட்ட கால் இடறி சத்தம் கேட்டதையடுத்து எழுந்த பல் மருத்துவர் உடனடியாக  ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் சுற்றி உள்ள பகுதிகளில் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது  ரயில் நிலையம் அருகே மருத்துவர் கூறிய அடையாளங்ளுடன் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் பையில் பல் மருத்துவர் வீட்டில் திருடிய நகை மற்றும் செல்போன்கள் இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்த போலிசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க :  வீட்டை எழுதி வாங்கிய மகன்.. கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர்!

ஒதியன்சாலை போலீசார் விசாரணையில் அவர், திப்புராயப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன்(22) என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 2017ம் ஆண்டு  மணிகண்டன் சீறாராக இருந்த போது ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை செய்துள்ளார். அந்த உரிமையாளர் கூலி கொடுக்க தாமதமானதால் அவரின் மோதிரத்தை திருடியுள்ளார்.

அதே போல் புதுச்சேரி நகரப்பகுதியில் ஏற்கனவே வேலை செய்த பல் மருத்துவரின் வீட்டின் அமைப்பை அறிந்த அவர், அங்கு சென்று திருடியுள்ளார். தனது மகனின் முதல் பிறந்த நாளுக்கு வாங்கிய 70,000 ரூபாய் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை எனவும் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே இவ்வாறு திருட்டில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் இருந்து திருடப்பட்ட  5 சவரன் நகை மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Gold Theft, Puducherry, Theft