ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

ஆம்புலன்ஸ் இருக்கு டிரைவர் இல்லை.. நோயாளியிடம் அலட்சியமாக பதிலளித்த மருத்துமனை ஊழியர்கள் - வைரலாகும் வீடியோ

ஆம்புலன்ஸ் இருக்கு டிரைவர் இல்லை.. நோயாளியிடம் அலட்சியமாக பதிலளித்த மருத்துமனை ஊழியர்கள் - வைரலாகும் வீடியோ

அம்புலன்ஸ்க்கு டிரைவர் இலலை எனக் கூறிய செவிலியர்

அம்புலன்ஸ்க்கு டிரைவர் இலலை எனக் கூறிய செவிலியர்

புதுச்சேரியில் வேறு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கேட்ட நோயாளிடம் அங்கிருந்த செவிலியர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லை என கூறிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் மண்ணாடிபட்டு அருகேயுள்ள தமிழக பகுதி ஐவேலி கிராமத்தை சார்ந்தவர் கூலி தொழிலாளி ராஜேந்திரன். இவர் நேற்று மாலை திருக்கனூர் பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறிக்கடைக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார். அப்போது அவருக்கு விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடி உள்ளது.

இதனை அடுத்து அவரை அருகில் உள்ள மண்ணாடிபட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்த செவிலியர்கள் அவருக்கு முதலுதவி கொடுத்துவிட்டு உடனடியாக விழுப்புரம் பகுதியில் உள்ள முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.ஆனால் அவர்கள் ரத்தம் வழிந்து கொண்டிருப்பதால் அங்குள்ள ஆம்புலன்ஸ் மூலம் செல்ல கேட்டுகொண்டுள்ளனர். அதற்கு மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ்க்கு டிரைவர் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனை அங்கு அருகில் இருந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் இவரது உயிருக்கு உத்தரவாதம் இருக்கா என கேட்கின்றார். இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனையின் தற்போதை நிலை என்று கூறி சமூக வலைத்தளங்களில் வைரல்லாகி வருகின்றது.

Also see... சிங்காரவேலர் சிலைக்கு பொட்டு வைத்த பாஜகவினருக்கு எதிர்ப்பு...

ஏற்கனவே ஆம்புலன்சின் மோசமான நிலையால் வடமாநில சிறுவன் ரயில் நிலையத்தில் இருந்து டிராலியில் அழைத்து செல்லும் வீடியோ வைரலானது குறிப்பிட தக்கது

Published by:Vaijayanthi S
First published:

Tags: Ambulance, Puducherry, Road accident