Home /News /puducherry /

ஜிப்மரில் பாராசிட்டமால் மாத்திரைகூட இல்லை... துணைநிலை ஆளுநருக்கு ஷாக் கொடுத்த அதிகாரி!

ஜிப்மரில் பாராசிட்டமால் மாத்திரைகூட இல்லை... துணைநிலை ஆளுநருக்கு ஷாக் கொடுத்த அதிகாரி!

 துணைநிலை ஆளுநர் தமிழிசை

துணைநிலை ஆளுநர் தமிழிசை

puducherry | ஜிப்மர் மருத்துவமனையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பில், ஜிப்மர் இயக்குனரை அழைத்து பாராசிட்டமால்  மாத்திரை கூட இருப்பு இல்லையா என்று நேரில் விளக்கம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • puducherry, India
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி-தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள் தினமும் 5000-க்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சமீப காலமாக ஜிப்மரில் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளது என்று புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில்  ஜிப்மர் சார்பில்  ஒரு சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டது.

அதில் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மருந்துகளை மட்டுமே நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இல்லாதவைக்கு வெளியில் வாங்கி கொள்ள தனி சீட்டு தர மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

இதனை அறிந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சென்னையில் இருந்து நேராக ஜிப்மருக்கு வந்து ஆய்வு செய்தார். அவருடன் சபாநாயகர் செல்வம், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, ஜிப்மர் ராகேஷ் அகர்வால் இயக்குனர் ஆகியோரும் உடனிருந்தனர்.

தொடர்ந்து  2 மணி நேரத்திற்கு இயக்குநர் மருத்துவர்களுடன் ஆய்வு நடத்தினார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். ஆனால் தற்போது அந்த நிலைமை சரி செய்யப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து கடந்த ஆண்டு 2  லட்சத்து 70 ஆயிரம் பேர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாகவும், பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் ஜிப்மரில் செயல்படுகிறது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

ஜிப்மரில் மருந்து மாத்திரைகள் கையிருப்பு இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது.அதே வேலையில் மருந்து மாத்திரைகள் வெளியில் வாங்க சொல்ல மருத்துவர்கள் சீட்டுகளை எழுதி கொடுக்கக் கூடாது என்றும் தமிழிசை திட்டவட்டமாக கூறினர்.

தொடர்ந்து துணைநிலை ஆளுநரை பார்த்து செய்தியாளர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் பாராசிட்டமால் மாத்திரை கூட இல்லை என்று தெரிவித்த நிலையில், அதை மறுத்தவர், மாத்திரை இருப்பு உள்ளதாக  தெரிவித்தார்.



தொடர்ந்து இதுகுறித்து  இயக்குனரை அழைத்து தெளிவுப்படுத்துமாறு வலியுறுத்தியதையடுத்து, செய்தியாளர் மத்தியில் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வாலை  அழைத்து பாராசிட்டமால் மாத்திரை இருப்பு உள்ளதா என்று தமிழிசை கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஜிப்மர் மருத்துவமனை அதிகாரி மாத்திரை இல்லாதது உண்மைதான். ஆனால் தற்போது நிலைமை சரி செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தனர்.

Also see... கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு..

செய்தியாளர் கேள்விக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஜிப்மர் இயக்குனரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது அந்த இடத்தில் சிறிதுநேரம்  பரபரப்பு நிலவியது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: JIPMER, Puducherry

அடுத்த செய்தி