ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியிலும் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் ஸ்டாலின் பேச்சுக்கு நாராயணசாமி பதில்!

புதுச்சேரியிலும் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் ஸ்டாலின் பேச்சுக்கு நாராயணசாமி பதில்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் - நாராயணசாமி

தமிழக முதல்வர் ஸ்டாலின் - நாராயணசாமி

திமுகவினரை உற்சாகப்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவ்வாறு பேசியுள்ளார் என விளக்கமளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுவையிலும் திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என ஸ்டாலின் கூறியதில் தவறில்லை என நாரயணசாமி விளக்கமளித்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஒரு இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் புதுவையிலும் திமுக ஆட்சி அமையும். திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கும் தேவை என தெரிவித்தார்.

இதையும் படிக்க :  புதுச்சேரி ஆட்சியரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்!

இதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது, புதுவையிலும் திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என ஸ்டாலின் கூறியதில் தவறில்லை. திமுகவினரை உற்சாகப்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவ்வாறு பேசியுள்ளார் என விளக்கமளித்தார். தமிழகத்தை போலவே புதுவையிலும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரியில் தனியார்மயமாகும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்த அவர், லாபத்தில் இயங்கும் புதுச்சேரி மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதா? என கேள்வி எழுப்பி தன் எதிர்ப்பை தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, Congress, DMK, Narayanasamy, Puducherry