Home /News /puducherry /

புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.. அதிமுக

புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.. அதிமுக

புதுச்சேரி - அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்

புதுச்சேரி - அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்

Puducherry | இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் போடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.1,729 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    புதுச்சேரியின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ஆம் தேதி துவங்குகிறது. துணைநிலை ஆளுநர் உரை நிகழ்த்துகிறார். ஆனால் பட்ஜெட் தேதி இன்னும் இறுதியாகவில்லை. துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் கடந்த மாதம் கூட்டப்பட்ட மாநில  திட்டக்குழு கூட்டத்தில் இவ்வாண்டு பட்ஜெட், மத்திய அரசின் நிதியுதவி,  மாநில அரசின் வருவாய் மற்றும் கடன் பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கி சுமார் 11,000 கோடி என இறுதி செய்யப்பட்டது.

    இதில் மத்திய அரசின் நிதியுதவி தோராயமாக ரூ.2,900 கோடி என முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் போடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.1,729 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்பொழுது கூடுதலாக மாநில அரசு, சுமார் ரூ.1,200 கோடி மத்திய அரசின் நிதியுதவியை எதிர்பார்த்து இந்த ஆண்டு பட்ஜெட்டிற்கான தொகையை இறுதி செய்துள்ளது.

    இந்த வித்தியாசத்தால் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி உள்ள நிலையில் மத்திய அரசின் கூடுதல் நிதியான ரூ.1200 கோடியை, பட்ஜெட் இறுதி வரைவுக்கு முன்பே அனுமதி வாங்க வேண்டும்.

    Also see... திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிகளில் குளிக்க தடை

    இத்தொகையை மத்திய அரசு இன்று வரை ஏற்காததால் இவ்வாண்டு 11, 000 கோடிக்கான பட்ஜெட்டுக்கு இன்று வரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என கூறினார். உடனடியாக துணைநிலை ஆளுநர் தலைமையில் உயர் அதிகாரிகள் டெல்லி சென்று அனுமதி பெற வேண்டும் என அன்பழகன் வலியுறுத்தினார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Puducherry

    அடுத்த செய்தி