Home /News /puducherry /

காரைக்காலில் சிறுமி மீது நண்டை விட்டு பாலியல் சீண்டல்: வாலிபர் போக்சோவில் கைது...

காரைக்காலில் சிறுமி மீது நண்டை விட்டு பாலியல் சீண்டல்: வாலிபர் போக்சோவில் கைது...

சிறுமி மீது நண்டை விட்டு பாலியல் சீண்டல் செய்தவர் போக்சோவில் கைது

சிறுமி மீது நண்டை விட்டு பாலியல் சீண்டல் செய்தவர் போக்சோவில் கைது

Puducherry | காரைக்காலில் 14 வயது சிறுமியின் மேல் நண்டை போட்டு பயமுறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம் அன்பு நகரில்  மைக்கேல் என்ற 23 வயது இளைஞர் வசித்து வருகிறார். நேற்று தனது வீட்டில் சமைப்பதற்காக நண்டு வாங்கிவந்த மைக்கெல்  தனது வீட்டின் அருகே விளையாட்டி கொண்டிருந்த 14 வயது சிறுமியின்மேல்  வந்த நண்டை போட்டுள்ளார். மேலும் சிறுமியை பயமுறுத்தி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுமி கூச்சலிட அருகாமையில் இருந்தவர்கள் கூடி சிறுமியிடம் நடந்ததை கேட்டறிந்தனர். பின்னர் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற மைக்கலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து போலீசார்  சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற மைக்கலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Also see... திருப்பூரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

அதன் பிறகு அவரை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர். பாலியல் சீண்டலுக்கு உள்ளான 14 வயது சிறுமி காரைக்காலை அடுத்த தமிழக பகுதியை சேர்ந்தவர் ஆவார்.  தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் காரைக்கால் நகர பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Karaikal, Pocso, Sexual abuse

அடுத்த செய்தி