ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

சாவர்க்கர் கள்ளக்கடத்தல் செய்து சிறையில் இருந்தவர் இல்லை.. சுதந்திரப் போராட்ட வீரர் - தமிழிசை

சாவர்க்கர் கள்ளக்கடத்தல் செய்து சிறையில் இருந்தவர் இல்லை.. சுதந்திரப் போராட்ட வீரர் - தமிழிசை

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

அதிகாரப்பூர்வமாகவும், வரலாற்று ஆவணங்களைக் கொண்டே சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அனைத்தையும் அரசியலாக வேண்டாம் என்று தமிழிசை கோரிக்கை விடுத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதம மந்திரியின் ஸ்வாநிதி மகோத்சவ் என்ற பெயரில் சுயசார்பு சாலை வியாபாரிகளின் திருவிழா புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகள், மண்பாண்ட பொருட்கள், கைவினை பொருள்கள், டிஜிட்டல் பண பரிவர்த்தனை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் பற்றி பல்வேறு கருத்துக்களை சிலர் கூறி ஆர்ப்பாட்டங்களை அறிவித்து உள்ளனர். அந்தமான் சென்று அவரது வரலாற்றை அறிந்து கொண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தட்டும் என்றார்.

சாவர்க்கர் கள்ளக் கடத்தல் செய்து சிறையில் இருந்தவர் இல்லை அவரும் சுதந்திர போராட்ட வீரர் தான் என்று விளக்கம் அளித்தார். சுதந்திர போராட்ட வீரரான அவர் மீது பல கருத்து வேறுபாடுகள் சிலருக்கு உள்ளது. எங்களுக்கும் சில தலைவர்கள் மீது கருத்து வேறுபாடுகள் உள்ளது. அதை எல்லாம் மறந்து அவர்கள் செய்த நல்லதை மட்டுமே தாங்கள் எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

Also Read: வாய் தவறி வந்த வார்த்தை.. குடியரசு தலைவரிடம் மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சவுத்ரி..

அதிகாரப்பூர்வமாகவும், வரலாற்று ஆவணங்களைக் கொண்டே சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் என்று உறுதிப்படுத்தப்பட்டு

உள்ளதாகவும், அனைத்தையும் அரசியலாக வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார். போராட்டத்தை பார்த்து தான் கவலைப்படும் ஆள் இல்லை என்று தெரிவித்த தமிழிசை தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Pudhucherry, Tamilisai, Tamilnadu