Home /News /puducherry /

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவமானமா...? தமிழிசை பதில்..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவமானமா...? தமிழிசை பதில்..

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன்

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன்

Tamilisai on Chidambaram Temple Row : சிதம்பரம் நடராஜர் கோவில் என்றாலே பிரச்னைதான். தீட்சிதர்கள் மற்றும் மக்களுடைய பிரச்னைகளை சிவன்தான் தீர்க்க வேண்டும் என்று தமிழிசை செளந்திரராஜன் கூறினார்.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் இன்று காலை பங்கேற்றார். அப்போது அங்கிருந்த கோயில் யானையிடம் அவர் ஆசி பெற்றார். அப்போது கோயில் தீட்சிதர்கள் ஆளுநருக்கு பிரசாதம் வழங்கினர். பின்னர் புதுச்சேரிக்கு வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சிதம்பரம் கோயிலில் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் பதிலளித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தங்களுக்கு அவமரியாதை செய்யப்பட்டதான புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியற்கு துணைநிலை ஆளுநர், “ சிதம்பரம் நடராஜர் கோவிலில் தன்னிடம் ஒருவர் வந்து இந்த இடத்தில் உட்கார வேண்டாம் மற்றொரு இடத்தை காட்டி அங்கே உட்காருங்கள் என்றார். நான் ஏற்கவில்லை. இறைவனை பார்க்க வந்துள்ளேன். இங்குதான் உட்காருவேன் என்றேன். அவர் போய் விட்டார். அதை நான் பெரிதாக நினைக்கவில்லை” என்றார்.

Also see... சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன அபிசேகம்.. தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம்

மேலும், “ சிதம்பரம் நடராஜர் கோவில் என்றாலே பிரச்சனையாகவே உள்ளது என தெரிவித்தவர். தீட்ச்சதர்கள் பிரச்சினை தீர்க்க வேண்டும். மக்களுடைய பிரச்சனையும் சிவன் தான் தீர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Puducherry, Tamilisai Soundararajan

அடுத்த செய்தி