புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள மக்கள் மருந்தகத்தை மக்கள் மருந்தக வார விழாவை ஒட்டி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று பார்வையிட்டார். பொதுமக்கள் முன்னிலையில், மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பை மற்றும் வகைமையைப் பார்வையிட்டார். தொடர்ந்து விற்பனை திறன் குறித்து கடை பொறுப்பாளரிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மருந்தகங்கள் எந்த அளவிற்கு மக்களுக்கு பயன் தருகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த வாரம் மக்கள் மருந்தக வாரமாக கொண்டாடப்படுகிறது. நேற்று மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. இன்று, மக்கள் மருந்தகத்தை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வந்தோம். இங்கு ஒரு நோயாளி வாங்கி மருந்து ஆயிரம் ரூபாய் இருக்கும். இங்கு அதன் விலை வெறும் 75 ரூபாய் மட்டுமே. மக்கள் மருந்தகங்களில் 90 % மருந்துகள் விலை குறைவாக கிடைக்கிறது. வெளியில் விலை அதிகமான குளூக்கோமீட்டர் இங்கு 500 ரூபாய்க்கும் அதோடு பரிசோதனை பட்டைகளும் தரப்படுகிறது. வெளியில் இந்த குறைந்த விலையில் வாங்க முடியாது. இங்கு சத்து மாவு மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. மக்கள் மருந்தகம், பாரதப் பிரதமரின் கனவு திட்டம். நல்லவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் பயன் தரக்கூடிய ஒன்று. பத்திரிக்கையாளர்கள் இதை பிரபலப்படுத்த வேண்டும். மக்கள் மருந்தகங்கள் லாபத்திற்காக நடத்தப்படும் கடைகள் அல்ல. மக்களின் நலனுக்காக, உடல் நலத்திற்காக நடத்தப்படுவது. அதனால் இதை பிரபலப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் முடிந்த அளவுக்கு மாத்திரைகள் தரப்படுகிறது. உயர் ரக ரத்த அழுத்த மாத்திரைகள், சில எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வெளியில் வாங்கிக் கொள்ள எழுதிக் கொடுக்கப்படுகிறது. அடிப்படையில் ஒரே மருந்துகள் இவைதான். பெயர்கள் வேறு வேறாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக மருந்தகத்தில் உள்ள மருத்துவ கருவி,உயர் ரக மருந்து வகை ஆகியவற்றை ஆளுநர் எடுத்து பார்த்தார். அப்போது சர்க்கரை அளவை கண்டறியும் கருவி, புரோட்டின் பவுடர் ஆகியவற்றை வாங்கிய துணைநிலை ஆளுநர், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தவர்களில் யாருக்காவது நீரழிவு நோய் இருக்கிறதா, சத்து குறைவானவர்கள் இருக்கிறார்களா என கேட்டு இருவருக்கு அவற்றை வழங்கினார். மேலும் ஒரு வாடிக்கையாளர்களுக்கு மருந்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.