ஆளுநர்கள் அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டார்கள் என்றும் வாரிசு அடிப்படையில் இல்லை எனவும் கனிமொழியில் பேச்சுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதிலளித்துள்ளார்.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஜன்ஜட்டியா கவுரவ் திவாஸ் விழா காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரயங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், சில தினங்களுக்கு முன்பு ஒரு கட்சி இங்கே பிரிவினையைப் பற்றி பேசும்போது, ராணுவ வீரர் ஒருவர், நாட்டின் எல்லையில் மக்களுக்காக தனது வசதி வாய்ப்புகளையும், இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் நாங்கள் நாட்டை காப்பாற்ற துன்பப்பட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் பிரிவினை பேசிக்கொண்டிருக்கிறீர்களே என்று கூறினார். இதனை எதிர்த்து அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கடலூரில் ராணுவ வீரரின் வீட்டுக்கு சென்று குடும்பத்தாரை மிரட்டி, துன்புறுத்தியுள்ளனர். இதனை எந்தவிதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது. ராணுவ வீரர்கள் எந்தவிதத்திலும் விமர்சிக்கப்படக்கூடாது என்பது அரசியலமைப்புச் சட்ட விதிகளியே இருக்கிறது. ஆகவே இத்தகைய நிகழ்வுகள் தேசப்பற்றை குலைப்பதாகவும், தேசத்துக்காக போராடுகின்ற வீரர்களை நிந்திப்பதாகவும் இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்றார்.
தொடர்ந்து, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளிமாநிலத்தவர் சேர்க்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எனக்கும் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் தேர்வுக்கும் சம்மந்தமே இல்லை. அது நேர்மறையாக அவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் தான் என்னிடம் வந்தது. அதில் ஒருவர் மட்டுமே சென்னையை சேர்ந்தவர், மற்ற அனைவரும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள்.தலைமைச் செயலர், சட்ட செயலர் ஆகியோர் நேர்முகத் தேர்வு நடத்தி, மதிப்பெண் கொடுத்து அதிகாரப்பூர்வமாக தகுதிப்படைத்தவர்கள் என்று அவர்கள் கொடுத்த பட்டியல்தான் இது. ஆதலால் இதில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை. புதுச்சேரி புறக்கணிக்கப்படுவதை என்றுமே நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.புதுச்சேரிக்காக தேவையான உதவிகளை மத்திய அரசிடம் சென்று கேட்டு வருகிறேன் என தமிழிசை பதிலளித்தார்.
புதுச்சேரி முதலமைச்சருக்கும், தனக்கும் எந்தவித விரிசலும் இல்லை. பாசப்பிணைப்புதான் இருக்கிறது. அது செயற்கையாக ஏற்படுத்தப்படுகின்ற விரிசல் தான் என கூறினார்.
தமிழக ஆளுநர் காலாவதியானவர் என கனிமொழி எம்பி கூறியது குறித்த கேள்விக்கு, ஆளுநர்களை பற்றி இப்படி கருத்துச் சொல்வதை தவிர்க்க வேண்டும். ஆளுநர்கள் சாதாரண மனிதர்கள் போலவும், மரியாதை கொடுக்க வேண்டாதவர்கள் என்பதை போன்ற எண்ணம் இப்போது இருக்கிறது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. அவர்கள் கருத்துக்களை சொல்லலாம். ஆனால் ஆளுநர்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆளுநர்கள் எல்லோரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் தகுதியின் அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள். வாரிசு அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள் இல்லை. இதனை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
செய்தியாளர்: இளவமுதன், புதுச்சேரி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dr tamilisai soundararajan, Kanimozhi, Tamilisai, Tamilisai Soundararajan