அரபிந்தோ சொசைட்டி சார்பில் ஸ்ரீ அரவிந்தர் நினைவு தபால் தலை மற்றும் நாணய வெளியிட்டு விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. இதனை இணைய வழியே பிரதமர் மோடி வெளியிட்டார். விழாவில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தமிழக ஆளுநர் ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இணைய வழியே சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, மகான் அரவிந்தரின் நினைவை போற்றுகிற விதத்தில் ஒரு நினைவு நாணயமும் அஞ்சல் தலையையும் வெளியிடப்பட்டிருப்பது இந்தியாவில் ஒரு புதிய சக்தியை உருவாக்கியுள்ளது. அரவிந்தரின் யோக சக்தி என்பது ஒரு சமூக சக்தி என்பது மட்டுமல்ல அது அனைவரையும் இணைக்கும் சக்தியாகும் என்றார்.
1893 ஆம் ஆண்டில் தான் அமெரிக்காவில் விவேகானந்தர் அவர்கள் சென்று சாதனையை படைத்தார். 1893 ஆம் ஆண்டுதான் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று சாதனைப் படைத்தார். 1893லிருந்து தான் இங்கிலாந்தில் இருந்து படிப்பை முடித்துக்கொண்டு அரவிந்தர் திரும்பினார். எனவே 1893 ஆம் ஆண்டு என்பது ஒரு பொருத்தமான ஆண்டாக மூன்று பேருக்குமாக அமைந்தது.
அதேபோன்று சுபாஷ் சந்திர போஸும் அதே போன்ற ஒரு சாதனைகளை படைத்தார். இதன் மூலம் மோட்டிவேஷன் என்று சொல்வது ஒரு ஆக்ஷன் செயல்பாடாக அமைந்தது என பிரதமர் தெரிவித்தார்.
தேசத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து அரவிந்தர் ஒரு தேசபக்தியாக உருவானார். அவரது பிறப்பு வங்காளத்தில் இருந்தாலும் கூட அவர் குஜராத்தி மொழியை கற்றார். வங்காள மொழியை கற்றார். இதுபோன்ற பல மொழிகளை அவர் நேசித்தார்.
மேலும் அவர், தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டதோடு மட்டுமல்ல ஆன்மீக சக்தியையும் மேலே கொண்டு வர வேண்டும் என்று விரும்பி ஆன்மீக சக்தி உடைய உறுதியான நிலையை சுதந்திர வேட்கையை உருவாக்கி இந்தியாவை தலை நிமிரச் செய்தார் என பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.
இது குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், பாரதி மற்றும் அரவிந்தருக்கு இணக்கமான நட்பு இருந்தது. அரவிந்தருக்கு முருங்கக்காய் சாம்பார் பிடிக்கும் என்பதால் பாரதி அவரது மனைவியிடம் கூறி வைத்து எடுத்து சென்று கொடுப்பாராம். அந்த அளவிற்கு அரவிந்தர் மற்றும் பாரதி நட்புறவுடன் இருந்துள்ளனர் என குறிப்பிட்டார்.
தாய்மொழி கல்வி தான் முக்கியம் என அரவிந்தர் சொன்னார். அந்த வகையில் புதிய கல்விக்கொள்கை உள்ளது. இதேபோல் இணைப்பு நாடாக இருக்க வேண்டும் என அரவிந்தர் சொன்னார். அதன்படி ஜி-20 க்கு தலைமை தாங்குகிறோம். அரவிந்தரின் கனவு நினைவாகி வருகிறது என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
முதல்வர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மீகம் மாநிலம். அரவிந்தர் எண்ணியது போல தலை சிறந்த நாடாக இந்திய உள்ளது. ஆன்மீக பலம் இருந்தால் நாடு, உலகம் வளரும், தெய்வத்தால் மட்டுமே வாழ்வில் வளர முடியும். அரவிந்தர் ஒரு ஞானி, சித்தர். பல நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் அரவிந்தர் ஆசிரமம் செல்லாமல் இருக்க மாட்டார்கள். சர்வதேச நகரத்தை அன்னை உருவாக்கினார். ஆன்மீகத்தில் மட்டுமே நாடு முன்னேறும் என்றார்.
Also see... 99 வயதிலும் சன்னிதானம் வந்து ஐயப்பனை தரிசித்த மூதாட்டி
தமிழக ஆளுநர் ரவி பேசுகையில், மகான் அரவிந்தரின் தியான யோகா, கர்ம யோகா, பக்தி யோகா ஆகியவை நாட்டின் நலத்திற்கு பொருத்தமாக இருக்கும். இவற்றை உள்ளடக்கி தான் பிரதமரின் திட்டங்கள் உள்ளன. இது போன்ற ஞானிகளின் சித்தானந்தத்தினால் இந்தியா உலக நாடுகளுக்கு வழிகாட்டுகிறது என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PM Modi, Puducherry