ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியில் பால் தட்டுபாடு - பொதுமக்கள் அவதி

புதுச்சேரியில் பால் தட்டுபாடு - பொதுமக்கள் அவதி

Puducherry | புதுச்சேரியில் ‘பாண்லே’ பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பூத்களில் பால் இல்லை என்று பலகை வைத்து இருப்பதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

Puducherry | புதுச்சேரியில் ‘பாண்லே’ பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பூத்களில் பால் இல்லை என்று பலகை வைத்து இருப்பதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

Puducherry | புதுச்சேரியில் ‘பாண்லே’ பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பூத்களில் பால் இல்லை என்று பலகை வைத்து இருப்பதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லே  மூலம் புதுச்சேரி முழுவதும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் தலா ஒரு லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக பாண்லே பால் தட்டுப்பாடு இருந்து வந்தது. நேற்று பாதி அளவு பால் மட்டுமே உற்பத்தி ஒன்றியத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டது.

இதனால் புதுச்சேரி முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதேபோல் இன்றும் அனைத்து பாண்லே பூத்களிலும் குறைவான பால் பாக்கெட் மட்டுமே வந்துள்ளதால் அது காலை 6 மணிக்குள்ளே விற்று தீர்ந்து விட்டது. பால் பாக்கெட்டுகள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

காலையிலேயே அவை  தீரிந்து விட்டதால் தற்போது பால் இல்லை என பல பூத்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ளூர் உற்பத்தி 50,000 லிட்டர் மட்டுமே. மீதமுள்ளதை வெளிமாநிலங்களில் இருந்து வாங்குவது வழக்கம். நிர்வாக பிரச்சனை காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து பால் வாங்கவில்லை. இதுவே பால் தட்டுப்பாடிற்கு காரணம் என தெரிகிறது.

இதனை உடனடியாக புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும்  பொதுமக்களும்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Also see... கேரள நரபலி வழக்கு விசாரணையில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்

இதனிடையே புதுச்சேரியில்  பால் தட்டுப்பாட்டை போக்க கர்நாடக மாநிலத்திலிருந்து 15 ,000லிட்டர் பால் முதற்கட்டமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் பால் தட்டுப்பாடு சரி செய்யப்படும் என பாண்லே நிர்வாக இயக்குனர் முரளி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, “ புதுச்சேரியில் இரண்டு நாட்களாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலைமையை போக்கும் விதமாக புதுச்சேரி அரசு மற்றும் பாண்லே நிர்வாகம் சேர்ந்து கர்நாடகா மாநிலத்திலிருந்து 15 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பால் இன்று மாலைக்குள் புதுச்சேரிக்கு வந்துவிடும். புதுச்சேரிக்குள் 62,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து வரும் 25 ,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 87,000 லிட்டர் இன்று மாலைக்குள் புதுச்சேரி முழுவதும் வழங்கப்படும்” என பாண்லே நிர்வாக இயக்குனர் முரளி தெரிவித்துள்ளார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Milk, Puducherry