ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

நெற்பயிரில் அழகாய் செதுக்கப்பட்ட சிவலிங்கம், இந்தியா - காரைக்கால் விவசாயி செய்த வித்தியாச முயற்சி!

நெற்பயிரில் அழகாய் செதுக்கப்பட்ட சிவலிங்கம், இந்தியா - காரைக்கால் விவசாயி செய்த வித்தியாச முயற்சி!

நெற்பயிரில் சிவலிங்கம், இந்தியா வரைபடம்

நெற்பயிரில் சிவலிங்கம், இந்தியா வரைபடம்

Karaikal News : இயற்கை விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karaikal, India

இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தி சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவில் நெற்பயிர் சாகுபடி செய்து  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் காரைக்கால் விவசாயி.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின்  காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி பாஸ்கர். இவர் வரிச்சிகுடி கிராமத்தில் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கையான முறையில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ராஜமுடி சின்னார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்.

மேலும், இயற்கை விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.

நெற்பயிரில் சிவலிங்கம், இந்தியா வரைபடம்

இந்நிலையில், அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வயலின் நடுவே 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி சம்பா நெல் ரகத்தை கொண்டு சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ''12 வருஷத்துக்கு முன்னாடியே தமிழ்லதான் பொறியியல்''.. அமித்ஷா யோசனைக்கு பொன்முடி பதில்!

அந்த நெற்பயிர்கள் அனைத்தும்  தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. இதன் தற்போதைய கழுகு பார்வை காட்சிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

நெற்பயிரில் சிவலிங்கம், இந்தியா வரைபடம்

அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளது  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Agriculture, Karaikal, Pondicherry