ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

காரைக்காலில் பள்ளி மாணவர்களை அச்சுறுத்திய கதண்டுகள்.... தீயணைப்பு துறை எடுத்த முடிவு!

காரைக்காலில் பள்ளி மாணவர்களை அச்சுறுத்திய கதண்டுகள்.... தீயணைப்பு துறை எடுத்த முடிவு!

காரைக்காலில் பள்ளி மாணவர்களை அச்சுறுத்திய கதண்டுகள்

காரைக்காலில் பள்ளி மாணவர்களை அச்சுறுத்திய கதண்டுகள்

Karaikal News : புகாரை ஏற்று நிலை அதிகாரி மாரிமுத்து தலைமையிலான தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனத்துடன் வந்து கதண்டு கூடு உள்ளதா என ஆய்வு செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karaikal, India

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் நகரப் பகுதியில்  செயின்ட் ஜோசப் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி வளாகத்தில் வாகை மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் கதண்டுகள் இருப்பதாகவும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு மாணவர்களை கதண்டு கடித்து விட்டதாகவும் தீயணைப்பு துறைக்கு புகார் வந்தது.

புகாரை ஏற்று நிலை அதிகாரி மாரிமுத்து தலைமையிலான தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனத்துடன் வந்து கதண்டு கூடு உள்ளதா என ஆய்வு செய்தனர். கூடு இல்லாமல் மரத்திலேயே கதண்டுகள் தங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் ஸ்போம் என்று சொல்லக்கூடிய ஒரு வகை ரசாயனத்தை கொண்டு நுரையை பீய்ச்சு அடித்து கதண்டுகளை விரட்ட திட்டமிட்டு மரத்தின் முழு பகுதியும் நுரையால் நனையுமாறு நுரையை பீச்சு அடித்து கதண்டுகளை அதிரடியாக விரட்டினர்.

இதையும் படிங்க : ஜாஸ் சினிமாஸ் திரையரங்கை வாங்கியது ஐநாக்ஸ்

இந்த ரசாயனத்தின் வாசனைக்கு கதண்டுகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் எதுவும் மரத்தில் தங்காது என்பதால் இந்த முறையை பயன்படுத்தியதாக தீயணைப்பு நிலைய அதிகாரி மாரிமுத்து தெரிவித்தார்.

மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்கள் சரியில்லை. கதண்டுகள் தொல்லை என பல்வேறு பிரச்சனைகளால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதை பள்ளி கல்வித்துறை உணர்ந்து பள்ளி கட்டிடங்கள் மற்றும் பள்ளி சூழல்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Puducherry