ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியில் 7 வருஷமா சரி செய்யாத ரோடு.. தனி ஒருவனாய் சீரமைக்கும் சிறுவன் - வைரலாகும் வீடியோ

புதுச்சேரியில் 7 வருஷமா சரி செய்யாத ரோடு.. தனி ஒருவனாய் சீரமைக்கும் சிறுவன் - வைரலாகும் வீடியோ

சாலையை சீரமைக்கும் சிறுவன்

சாலையை சீரமைக்கும் சிறுவன்

Puducherry News : தனது தாத்தாவிற்கு விபத்து ஏற்பட்டதால் அதேபோல் யாரும் விபத்தில் சிக்கக்கூடாது என தனி ஒருவனாக புதுச்சேரியில் சாலையை சீரமைத்த சிறுவன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் தனி ஒருவனாக சாலையை சிறுவன் சீரமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றுள்ளது.

புதுச்சேரி சேந்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் சேகர்(60), இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வில்லினூர் - பத்துகண்ணு சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலை பள்ளத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்பக்கமாக வந்த மற்றொரு வாகனம் அவர் மீது பலமாக மோதியது. இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், புதுச்சேரியில் 7 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையில் தனது தாத்தாவிற்கு விபத்து ஏற்பட்டதால் வேறு யாரும் இதேபோல் விபத்தில் சிக்காமல் இருக்க சாலையை சீரமைக்கும் பணியில் சேகரின் பேரன் 8ம் வகுப்பு படிக்கும் மாசிலாமணி தனி ஆளாக சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டான். இதனை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றுள்ளது. மேலும், இதனை பார்த்த சிலர் சிறுவனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Puducherry