Home /News /puducherry /

மகளை விட நன்றாக படித்த சிறுவனை விஷம் வைத்து கொன்ற பெண்... காரைக்காலில் அதிர்ச்சி சம்பவம்

மகளை விட நன்றாக படித்த சிறுவனை விஷம் வைத்து கொன்ற பெண்... காரைக்காலில் அதிர்ச்சி சம்பவம்

கொலை வழக்கில் கைதான சகாயராணி

கொலை வழக்கில் கைதான சகாயராணி

சகாயராணி விக்டோரியா, சிறுவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்துள்ளார். அதனை குடித்த சிறுவன் மயக்கமடைந்து உயிரிழந்தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karaikal, India
    தனது மகளை விட நன்றாக படிக்கும் சிறுவனை குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் நகரப் பகுதியில் குடியிருப்பு கட்டிடடத்தில் வசித்து வரும் தம்பதியினர் ராஜேந்திரன்-மாலதி. இவர்களுடைய மகன் பால மணிகண்டன்(13) காரைக்கால் நேரு நகரில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியின் ஆண்டு விழா  நடைபெறவுள்ளதால் அதையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    காலை 11 மணி அளவில் ஒரு பெண்மணி பள்ளி வாசலில் வந்து பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியரிடம், எட்டாம் வகுப்பு படிக்கும் பால மணிகண்டனிடம் குளிர்பானத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். அவர் உடனடியாக வகுப்பறையில் இருந்த பால மணிகண்டனிடம் அதனை கொடுத்துள்ளார். சிற்றுண்டி இடைவேளையில் அந்த குளிர்பானத்தை பால மணிகண்டன் குடித்துள்ளான்.

    நேற்று பள்ளி ஆண்டு விழா என்பதால் மதியம் அனைத்து மாணவர்களும் விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பால மணிகண்டன் வீட்டுக்கு செல்லும்போது வீட்டில் வாந்தி எடுத்துள்ளான். அதனைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே குளிர்பானத்தை யார் கொடுத்தது என்று விசாரித்தனர். அப்போது கேட்டில் இருந்த வாட்ச்மேன் ஒரு பெண்மணி வந்து கொடுத்தாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி மூலம் அதனை உறுதிப்படுத்தியதையடுத்து  காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

    விசாரணையில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரின் தாயார் சகாயராணி விக்டோரியா(42) குளிர்பானத்தை கொடுத்தது தெரிய வந்தது, அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். குளிர்பானத்தை கொடுக்கவில்லை, பிஸ்கட் மட்டுமே கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சிசிடிவி காட்சியில் குளிர்பானத்தை  அவர் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
    மேலும் விசாரணை செய்ததில் பால மணிகண்டன்  சகாயராணியின் மகளை விட நன்றாக படிப்பதாகவும் தற்போது நடைபெற்ற தேர்வில் அவர் முதல் மதிப்பெண் பெற்றதாக தெரிய வருகிறது. மேலும் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் அவன் சிறப்பாக திறமை காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: மருத்துவர்களின் அலட்சியம்.. அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த 6 வயது சிறுவன் - பெற்றோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு

    அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் மாணவியின் தாயார் விஷம் கொடுத்ததாக மாணவனின் தந்தை ராஜேந்திரன் புகார் அளித்தார்.
    இந்த நிலையில் மாணவன் பால மணிகண்டன் நேற்று நள்ளிரவு அரசு மருத்துவமனையில் இறந்தார்.

    இதனிடையே சகாயராணி விக்டோரியா(42) மீது காரைக்கால் நகர போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். படிப்பில் முதலிடம், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் என தனது மகளுக்கு போட்டியாக இருந்த 13 வயது மாணவனுக்கு விஷம் கொடுத்து தாய் கொன்ற  சம்பவம் காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Karaikal, Murder, Murder case

    அடுத்த செய்தி