ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

கனமழைக்கு வாய்ப்பு - காரைக்கால், புதுச்சேரி பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

கனமழைக்கு வாய்ப்பு - காரைக்கால், புதுச்சேரி பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 3ம் தேதியை பொறுத்தவரை ''தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (4 மற்றும் 5ம் தேதி ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் மீண்டும் மழை.. பதட்டம் வேண்டாம்..' சென்னைவாசிகளுக்கு கூல் அப்டேட் சொன்ன வெதர்மேன்

    மழை அப்டேட்..

    04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Chennai rains, Weather News in Tamil