ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

தமிழிசை பெயரில் அமைச்சரிடம் உதவி கேட்டு மோசடி.. புதுச்சேரியில் பரபரப்பு!

தமிழிசை பெயரில் அமைச்சரிடம் உதவி கேட்டு மோசடி.. புதுச்சேரியில் பரபரப்பு!

தமிழிசை மோசடி

தமிழிசை மோசடி

அடிக்கடி ஆளுநர் தமிழிசை பெயரில் மோசடி செயல்களில் ஈடுபடும் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரியில் தமிழிசை  பெயரில் பெண் அமைச்சரிடம் உதவி கேட்டு மோசடி செய்ய முயன்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திரபிரியங்கா. இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் அவரச வேலையாக இருப்பதால் தனக்கு உதவி தேவைப்படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை அனுப்பியது போல பதிவிட்டிருந்தது.

உடனே அவர் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் தெரிவித்துள்ளார். அவர்கள் நடத்திய விசாரணையில் ஆளுநர் பெயரில்  போலியான தகவல் அனுப்பியது தெரிய வந்தது.

இது குறித்து சைபர் க்ரைம்  போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களாக ஆளுநர் பெயரில் இது போன்ற போலி கணக்கு தொடங்கப்பட்டு, அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு செயலர் ஜவகர் உள்ளிட்டோரிடம் மோசடியில் ஈடுபட முயன்றது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Dr tamilisai soundararajan, Puducherry, Tamilisai Soundararajan