புதுச்சேரி பல்கலைக்கழகம், வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், காலியாக இருக்கும் Guest Faculty பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation Degree, Ph.D தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் (23.12.2022) ஆம் தேதி, தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் இருப்பவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து head.kcm@pondiuni.ac.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 22.12.2022ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைசி தேதி முடிந்தபின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?
மேலும் விவரங்களை, https://www.pondiuni.edu.in/university_news/walk-in-interview-for-guest-faculty-position-department-of-management-karaikal-campus/ இந்த இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Government jobs, Local News, Puducherry