Home /News /puducherry /

ரூ.5000 நிதி, 25 கிலோ அரிசி... ஏனாம் மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவிப்பு...

ரூ.5000 நிதி, 25 கிலோ அரிசி... ஏனாம் மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவிப்பு...

புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி

Puducherry | ஏனாமில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா, கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த மாதம் கோதாவரி நீர்பிடிப்பு பகுதியில்  கனமழை பெய்ததால் கடந்த மாதம் 12 ம் தேதி முதல் 10 நாட்களுக்கு ஏனாம்  பிராந்தியம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதனால் இந்த பகுதி மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்து அதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார். இதன்படி ஏனாமில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 11,651 குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 மற்றும் வறுமைகோட்டிற்கு மேல் உள்ள 4,165  குடும்பங்களுக்கு தலா ரூ.4,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Also see... கேரளாவில் தொடரும் கனமழை... பம்பா நதியில் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை...

மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். எதிர்காலத்தில் மழை வெள்ளம் ஏனாமை தாக்காமல் இருக்க சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு உதவும் எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Flood, Puducherry, Puthucherry cm

அடுத்த செய்தி