ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

3 வயது குழந்தையின் உயிரை பறித்த எலி பேஸ்ட்.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்...

3 வயது குழந்தையின் உயிரை பறித்த எலி பேஸ்ட்.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்...

உயிரிழந்த குழந்தை, எலி பேஸ்ட்(ஃபைல் படம்)

உயிரிழந்த குழந்தை, எலி பேஸ்ட்(ஃபைல் படம்)

Puducherry News : புதுச்சேரியில் 3 வயது குழந்தையின் உயிரை பறித்த எலி பேஸ்ட்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry, India

எலி பேஸ்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுச்சேரி சாரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், கூலி தொழிலாளியான இவருக்கு திவ்யா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இவர் வீட்டில் எலி தொல்லை அதிகமாக உள்ளதால் எலி பேஸ்ட் வாங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த திவ்யா சாக்லேட் என்று நினைத்து எலிபேஸ்ட் சாப்பிட்டாள். இதனையடுத்து பெற்றோர்கள் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதையும் படிங்க : WATCH - புதுச்சேரியில் விபத்து.. லாரியில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்.. சிசிடிவி வீடியோ

சிகிச்சை பெற்று வந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், எலி பேஸ்டால் உயிரிழப்பு ஏற்படுவதால் மாநிலம் முழுவதும் இதனை விற்பனை செய்வதற்கு தடை செய்ய வேண்டும் தொடர்ந்து மக்களின் கோரிக்கை ஆகவே உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Crime News, Local News, Puducherry