Home /News /puducherry /

கடற்கரை பகுதிகளில் தனி ஒருவனாக மட்டுமே திருட்டு.. பெயிண்டர் வேலை பார்த்துக்கொண்டே திருட்டில் ஈடுபட்ட இளைஞர்..

கடற்கரை பகுதிகளில் தனி ஒருவனாக மட்டுமே திருட்டு.. பெயிண்டர் வேலை பார்த்துக்கொண்டே திருட்டில் ஈடுபட்ட இளைஞர்..

திருட்டு வழக்கில் கைதான  இளைஞருடன் புதுவை போலீசார்

திருட்டு வழக்கில் கைதான இளைஞருடன் புதுவை போலீசார்

Puducherry | கொள்ளை அடிக்கும் நகைகளை கோயில் நிலத்தில் புதைத்து தேவைக்கு ஏற்ப எடுத்து செலவு செய்யும் திருடன் புதுச்சேரியில் சிக்கினான். மீனவ பகுதிகளில் மட்டும் கைவரிசை காட்டுபவர் சிக்கியது எப்படி...?

புதுச்சேரி பெரியகாலாப்பட்டு பகுதியில் வசிப்பவர் பெனிடிக் பிரான்சிஸ் (57). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கமலா ஜெயஸ்ரீ அரசு பள்ளியில்  தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். கடந்த மாதம் 21ஆம் தேதி கணவனும், மனைவியும் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டின் பின் பக்க கதவு திறக்கப்பட்டு அறையின் உள்ளே இருந்த அலமாரியில் ரூ.18 லட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காலாப்பட்டு ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். சிசிடிவி காட்சிகள் இல்லை. நேரடி சாட்சிகள் இல்லை. நிபுணர்கள் சேகரித்த ஒரு  கைரேகை மட்டுமே இருந்தது. அதுவும் புதுச்சேரியில் யாருடனும் பொருந்தவில்லை. தமிழக போலீசாரின் உதவியை நாடிய போது பழைய குற்றவாளி ஒருவரின் கைரேகை ஒத்துப் போனது. அவனுக்கு நிரந்தர விலாசம் இல்லை. ஆனால் அவன் கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் மட்டுமே தங்கி அங்கு மட்டுமே திருடி வந்துள்ளான் என்பதும் தெரியவந்தது.

அதே போல் தான் புதுச்சேரியின் கடலோர கிராமமான பெரியகாலாப்பட்டிலும் கைவரிசை காட்டியுள்ளான். இதனால் அவனது புகைப்படத்துடன் மீனவ பகுதிகளில் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்றிரவு போலீசார் காலாப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விழுப்புரம் இளைஞர்:

அப்போது அவன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததுடன் தங்க சங்கிலி ஒன்றை வைத்திருந்தான். அதில் மண் இருந்தது. இதனால் அவனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவன் விழுப்புரம் மாவட்டம் கூனிமேட்டை சேர்ந்த சுமன் (வயது 27) என்பது தெரியவந்தது. இவன் மீது பல்வேறு திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இதனையடுத்து அவனிடம் உரிய முறையில் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டான்.

அப்போது ஆசிரியர் வீட்டில் திருடிய நகையில் 10 பவுன் நகையை அவன் உருக்கி விற்றுள்ளான். மீதமுள்ள 25 பவுன் நகையை புத்துப்பட்டு அய்யனார் கோவில் அருகே உள்ள புதரில் மறைத்து வைத்திருந்தான். திருடும் நகைகளை கோயில் நிலத்தில் புதைத்து விட்டு தேவைக்கு மட்டும் எடுத்து அடகு வைத்தோ விற்றோ மது குடித்து உல்லாசமாக இருந்துள்ளான்.இதனையடுத்து மண்ணில் புதைத்து இருந்த 25 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவன் உருக்கி விற்ற நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Also see... யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் மீதான குண்டர் சட்டம் ரத்து...

தனி ஒருவனாக திருட்டு:

பின்னர் விசரணையில் சிறுவயதில் இருந்து மீனவ பகுதியில் வசித்து வருவதால் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே திருடுவதாக கூறினார். திருடுவது முக்கிய தொழிலாக இருந்தாலும் பெயிண்டர் வேலைக்கு அடிக்கடி செல்லும் இவன் அங்கு வீடுகளை நோட்டமிட்டு திருடுகிறான். துணைக்கு யாரையும் வைத்து கொள்வதில்லை என விசாரணையின் போது கெத்தாக போலீசாரிடம் தெரிவித்தான். மேலும்,  கொள்ளை அடிக்கும் நகைகளை கோயில் நிலத்தில் புதைத்து தேவைக்கு ஏற்ப எடுத்து செலவு செய்து வந்ததாகவும் அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Puducherry, Theft

அடுத்த செய்தி