ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

கூட்டமாக நின்ற மாணவிகள்.. நடுரோட்டில் வித்தை காட்டிய இளைஞர்.. வைரலாகும் வீடியோ!

கூட்டமாக நின்ற மாணவிகள்.. நடுரோட்டில் வித்தை காட்டிய இளைஞர்.. வைரலாகும் வீடியோ!

புதுச்சேரி வைரல் வீடியோ

புதுச்சேரி வைரல் வீடியோ

நடுரோட்டில் இவர் செய்த செயலால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரியில் ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர், பள்ளி மாணவிகளை ஈர்க்க நடுரோட்டில் வித்தை காட்டியது இணையத்தில் பரவி வருகிறது.

தற்போதைய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் உள்ள மோகம் காரணமாக ஆங்காங்கே சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். லைக்குக்காகவும், மற்றவர்களை கவருவதற்காகவும் ஏராளமானோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடனமாடி வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

சமீபத்தில் தூத்துக்குடியில் ஏராளமான மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடனமாடிய வீடியோவை நீக்கி போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அந்த வகையில், புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியில் பள்ளி முடிந்து மாணவிகள் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, ஹெல்மெட் அணிந்துவாறு நடந்து சென்ற இளைஞர் ஒருவர் திடீரென சேட்டையில் ஈடுபட்டார். மாணவிகளை ஈர்ப்பதாக நினைத்து சாலையிலேயே நடனமாடி தண்டால் அடித்தார்.

நடுரோட்டில் இவர் செய்த செயலால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில் போலீசார் அந்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Puducherry, Viral Video