ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

உதயநிதிக்கு அமைச்சர் பதவி- புதுச்சேரியில் ஒட்டப்பட்ட வாழ்த்து போஸ்டர்கள்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி- புதுச்சேரியில் ஒட்டப்பட்ட வாழ்த்து போஸ்டர்கள்

உதயநிதியை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

உதயநிதியை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி புதுச்சேரியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, நேற்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்படி தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அமைச்சராக பொறுப்பேற்றதை வரவேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுகவினர் வாழ்த்து பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி கொண்டாடி வருகின்றனர்.

போஸ்டர்கள் 

அந்த வகையில் புதுச்சேரியில் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி நகரப் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

போஸ்டர்கள்

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். மேலும், புதுச்சேரி தி.மு.க ஆட்சியமையும் என்று பேசினார்.

செய்தியாளர்: பிரசாந்த், புதுச்சேரி.

First published:

Tags: Local News, Puducherry